Sunday, January 25, 2009

Tuesday, December 26, 2006

<<>>அமெரிக்காவில் தமிழ்...!<<>>

அமெரிக்காவில் தமிழ்...!

ஆற்றலுடைய மொழி ஆங்கிலம்; இனிமையான மொழி இத்தாலி; நயமான மொழி பிரெஞ்சு; சாந்தமான மொழி பாரசீகம்; மென்மையான மொழி கன்னடம்; ஓசை மிக்க மொழி தெலுங்கு; கவர்ச்சியான மொழி மலையாளம்; இத்தனை இனிமையான பண்புகளையும் ஒரு சேரக் கொண்ட மொழி தமிழ் மொழி! ம்ம்ம்ம்ம்ம்... இப்போது தமிழகத்திலேயே தமிழ்.... தமிங்கிலம் என்ற திமிங்கிலமாக வலம் வருவது வேதனையே என்றாலும் இந்தக் கதி தமிழ் மொழிக்கு மட்டுமில்லை; உலகில் ஆங்கிலத்தை இணைத்து தங்கள் மொழிகளோடு உரையாடி உறவாடுவது உலகநாடுகளில் அந்தந்த மொழிகளுக்கு ஏற்பட்ட துயரங்கள்!
நம் இன்பத் தமிழுக்கும் இது வாய்த்துவிட்டது!
மலேசிய வானொலி, தொலைக்காட்சியில் பாட்டுப் போடும் அறிவிப்பாளர்களை மொழிக் கலப்படம் செய்யும் வேலையை நிறுத்தும்படி மலேசிய அரசு கட்டளையிட்டுள்ளது. அந்நாட்டுத் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் பணியாற்றும் அறிவிப்பாளர்கள் பலமொழிகளையும் கலந்து பேசுவதை
நாகரிகமாக்கி இளம் சமுதாயத்தினர்க்குப் பிழையான உதாரணமாக இருக்கிறார்களென்று கூறி அரசு அடுத்த அறுபது நாட்களுக்குள் முறையான, கலப்படமில்லாத மொழியைப் அவர்கள் நிகழ்ச்சிகளில் பயன்படுத்த வேண்டும் என்று அவகாசம் கொடுத்துள்ளது.
இதுபோன்ற ஒரு கடுமையான சட்டம் ஒன்றைத் தமிழ்நாட்டில் போட்டால்தான் தமிழ், தமிழ்நாட்டிலும் வாழும்....உலக நாடுகளிலும் வாழும்!

கடைகள், வர்த்தக நிறுவங்களின் விளம்பரப் பெயர்ப் பலகை தமிழில் எழுதாவிட்டால் போராட்டம் என்றும், திரைப்பத்திற்குத் தமிழ்ப் பெயர் வைக்கக் கோரி நடிகர்களோடு முட்டி மோதுபவர்கள் இதற்காகப் போராடினால் என்ன?
அமெரிக்காவில் தமிழ் எந்தவிதத்தில் இதனால் வளரும்? என்று
யாரோ கேட்பது என் காதுகளில் விழுகிறது. வளருதோ இல்லையோ, பாழாகாமலாவது இருக்கும் இல்லையா? அதுக்காகத்தான்! (தமிழகச் சின்னத் திரைகள் எல்லாம்தான் இப்போது அமெரிக்காவில் அரைகுறையாய் தமிழ் பேசும் இல்லங்களில் எல்லாம் தவறாமல் கதிரொளி வீசுகிறதே.)

இந்தியப் பிரதமர் தமிழகத்துக்கு வருகை தரும்போது பொதுக்கூட்டங்களிலோ, விழாக்களிலோ கலந்துகொண்டு பேசும்போது உரையின் தொடக்கத்தில் வணக்கம் என்றோ, முடிவில் நன்றி என்றோ தமிழில் சொல்லும்போது பார்வையாளர்களின் முகத்தில் புன்முறுவல் பூக்காமல் இருக்காது! கைகள் கரவொலி எழுப்பாமல் இருக்காது!
காரணம், வேற்று மொழிக்காரர் நம் மொழியில் இரண்டு வார்த்தை சொல்லுவதுதான் காரணம். அதுபோலத்தான் அமெரிக்காவில் ஆங்கிலம் பேசும் தமிழர்கள் எப்போதாவது ஓரிரு வார்த்தைகள் தமிழர்களிடம் பேசுவார்கள்!
நம்ம ஊரில் பிரதமர் மொழி தெரியாமல் ஓரிரு வார்த்தைகள் பேசுவார்; இவர்கள் மொழி தெரிந்தும் பேச விரும்பார். அவ்வளவுதான் வித்தியாசம்.
தாய்த் தமிழகத்தில் இனி குப்பை கொட்டி நம் வாழ்க்கைத் தரம் உயராது என்ற முடிவுடன் பல்வேறு சூழலில் அமெரிக்கக் கூட்டு நாடுகளில் குடியேறிகளாய் இருக்கும் தமிழர்களிடம் தமிழ் எப்படித் தவழ்கிறது!
புத்தகமே எழுதவேண்டிய விடயத்தைக் கட்டுரையாக சிஃபி வாசகர்களுக்குத் தருவது சாத்தியமா? குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவது என்பது இதுதானோ!
இதோ எனது குதிரை இலாயத்தை விட்டுக் கிளம்பிவிட்டது, உங்களையும் உடன் அழைத்துக்கொண்டு....!

இன்றுவரை எனக்குப் புரியாத புதிர் இது! ஒரு தெலுங்கரும்
இன்னொரு தெலுங்கரும் சந்தித்துக் கொண்டால் தெலுங்கிலேயே பேசுகிறார்கள்; ஒரு மலையாளியும் இன்னொரு மலையாளியும் சந்தித்துக்கொண்டால் மலையாளத்தில் பேசுவார்கள்; இதுமட்டுமில்லை, சீனரும் சீனரும் சந்தித்துக் கொண்டால் சீனமொழியிலும், சப்பானியர்கள் அவர்கள் மொழியிலும் பேசிக்கொள்ளும்போது தமிழர்கள் மட்டும் பொது இடங்களில் ஆங்கிலத்திலேயே பேச முனைவது ஏன்?

அமெரிக்காவிற்கு நான் வந்த புதிதில் தமிழ் முகங்கள் தட்டுப்படாதா என்று கடைகளில், வெளியிடங்களில் போகும்போது கண்கள் தானாகத் தேடத் தொடங்கும்; தமிழர்கள் எங்காவது தட்டுப்பட்டால் ஆசையாகப் பேச முற்படும்போது இரண்டொரு வார்த்தைகளை உதிர்த்துவிட்டு வேண்டாதவனைச் சந்தித்துவிட்டதுபோன்று ஒதுங்கிவிடுவார்கள்; முன்பின் அறிமுகம் இல்லை என்றால் கூட எதிரும் புதிருமாகச் சந்திக்கும்போது அமெரிக்கர்கள், '"ஹாய்..ஹவ் ஆர் யூ? நைஸ் வெதர்.."..என்று எதையாவது சொல்வது வழக்கம். ஆனால், நம்மவர்களோ, நம்மைத் தூரத்திலேயே பார்க்க நேர்ந்துவிட்டால் சட்டென்று வேறுபக்கம் தலையைத் திருப்பிக்கொண்டு போய்விடுவார்கள்!

முதன்முதல் ஒரு தமிழ் சங்கத்தைத் தேடிப் பிடித்து என்
மனைவி, மகள் சகிதமாகப் போனேன். உள்ளே நுழைந்ததும் முன் அறையில் நின்றுகொண்டிருந்த ஒருவர், "ஹாய்.. லீவ் யுவர் கோட்ஸ்... ?ஹியர்..." என்றார். தொடக்கமே இப்படியா என்று உள்ளே போய் மூன்றாவது வரிசையில் உட்கார்ந்தோம். எனக்கு அருகில் இளைஞர் ஒருவர் உட்கார்ந்திருந்தார்.
வணக்கங்க..... என்றேன். அவரோ ஹலோ என்றதோடு தலையை மேலும் கீழும் ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு அந்தப் பக்கம் திரும்பியவர்தான். நிகழ்ச்சி முடியும் வரை என் பக்கம் திரும்பவே இல்லை. அறிவிப்பாளர் நிகழ்ச்சி நிரலை ஆங்கிலத்தில் படித்தார். அதன்பின்னும் அவரது உரை ஆங்கிலத்திலேயே இருந்தது.
'நெக்ஸ்ட், டான்ஸ்.... நெக்ஸ்ட் சினி சாங்' என்றும் உச்சகட்டமாக
அவரது வருணனை எல்லாம் ஆங்கிலத்திலேயே இருந்தது. வேற்று மொழிக்காரர்களோ, அமெரிக்கர்களோ இல்லாத விழாவில் எதற்கு ஆங்கிலம்? மனசு வெறுத்துப்போய் வெளியேறினேன் அன்று!

ஒரு கட்டத்தில் நம்மவர்கள் சிலர் 'அலோ...' என்று சொல்லி முடிக்கும் முன்னே அவசராவசரமாக 'அலோ' சொல்லி விட்டு அந்த இடத்தைவிட்டு பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடிய அனுபவமும் உண்டு!
ஒரு வணிக வளாகத்தில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தபோது ஒரு இளம் தம்பதியர் வந்து 'அலோ, நீங்கள் இந்தியாவா?' என்றார்கள். 'ஆமாம்' என்றேன். 'இந்த ஏரியாவில் இந்தியன் மளிகைக் கடை எங்கிருக்கிறது தெரியுமா?' என்று ஆரம்பித்தார். சொன்னேன். மெதுவா, 'நீங்கள் மெட்ராசா?' என்றார். 'நான் பெங்களூர்தான். எனக்கும் கொஞ்சம் தமிழ் தெரியும்' என்றார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.ஒருநாள் பத்தரை மணி இருக்கும். அப்போதுதான் அப்பாடா என்று படுக்கையில் விழுந்த நேரம். தொலைபேசி அலற...எதிர் முனையில்...'சார்..நான்.. அன்னைக்கு உங்களைக் கடையில் பார்த்தேனே' என்று ஆரம்பித்து அரைமணி நேரம் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசினார். 'இந்தவாரம் சனி ஞாயிறில் ஒரு 'கெட் டு கெதர்' வச்சிருக்கோம் வாங்களேன்', என்றார். பரவாயில்லையே என்று, சரி சொன்னேன்.

அங்கு போன பிறகுதான் தெரிந்தது; அது ஒரு "ஆம்வே" வணிகம் பற்றியது என்று அறிய, அவசர அலுவல் என்று பாதியில் எழுந்து வந்தோம், பின்னர் தொலைபேசியில் அழைத்து ஒரே அர்ச்சனை;
நானும் மனைவியும் பாதியில் வந்துவிட்டோம் என்று. இதுபோல சில சம்பவங்கள் அடுத்தடுத்து அறிமுகம் அப்புறம் தொலைபேசி அழைப்பு, பிசினஸ் மீட்டிங் என்று அழைக்க நேரிட, இந்திய முகங்களைக் கண்டாலே கண்டும் காணாமல் நழுவி ஓட வைத்தது.

அமெரிக்காவில் சில இடங்களில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் தமிழுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து தமிழ் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றனர். இருப்பவர்களில் அடையாளம் கண்டுகொள்ளப்பட்ட கலைஞர்களை வைத்து நாடகம், நகைச்சுவை நிகழ்ச்சிகள் என்று அமர்க்களமாய் நடத்துபவர்களும் உண்டு. நியூஜெர்சி, வாஷிங்டன் டி.சி., அட்லாண்ட்டா, சிகாகோ போன்ற தமிழ்ச் சங்கங்கள் இதில் அடிக்கடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகின்றனர்.
வாஷிங்டன் தமிழ்ச் சங்கம் வயது அடிப்படையில் மூன்று நான்கு பிரிவாகப் பிரித்து, கோடைக்காலத் தமிழ் வகுப்புகள் என்று தங்கும் வசதியோடு குறைந்த கட்டணத்தில் சில வாரங்கள் நடாத்திச் சான்றுகள் வழங்கினர். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதுபோன்று குறைந்தபட்சம் பிற தமிழ்ச் சங்கங்கள் அல்லது ஆர்வலர்கள் ஏற்படுத்தி நடத்தினால் தமிழ் எதிர்கால வாரிசுகளிடம் வளரும், வாழும்!

கலிஃபோர்னியாவில் வளைகுடா தமிழ்மன்றத்தில் பாஞ்சாலி சபதத்தை அப்படியே தூய தமிழ்ச்சொற்களிலேயே நடாத்தி வெற்றிகண்டார். என்ன குறை நம்மிடம்? ஏன் எல்லாவற்றுக்கும் தமிழகத்திலிருந்தே நாடகம் போட வருவார்களா? என்று எதிர்பார்க்க வேண்டும். நண்பர்களிடம் தம் ஆதங்கத்தைச் சொன்னார்; நண்பர்கள் கைகொடுத்தனர். செந்தமிழில் பாஞ்சாý சபதத்தை நடத்தச் சபதம் எடுத்துக்கொண்டார்;
வெற்றிகண்டார், மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பு அதன் தலைவர் மணி.மணிவண்ணன். இப்படி சில விதிவிலக்கான தமிழ்ச் சங்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல நாடக நடிகர்கள், திரைப்படக் குழுவினர், பட்டிமன்றப் புகழ் பேச்சாளர்கள் போன்றோர் வந்து வருடம் ஒருமுறை தரிசனம் செய்துவிட்டுப் போவது வாடிக்கை. கலிஃபோர்னியாவிலிருந்து நியூயார்க்கை நோக்கியோ அல்லது நியூயார்க்கிலிருந்து கலிஃபோர்னியாவை நோக்கியோ ஒவ்வொரு மாநிலத் தமிழ்ச் சங்கங்கள் ஏற்பாடு செய்கிற இடங்களில் இந்தக் குழுவினர் நிகழ்ச்சிகள் தந்து செல்வது வழக்கம். தமிழர் திருவிழா!
தமிழர் திருவிழா...!
ஃபெட்னா எனப்படும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு வருடம் ஒருமுறை தமிழர் திருவிழா என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாநிலத்தில் என்று திட்டமிட்டு தமிழகத்திýருந்து நல்ல பேச்சாளர்களையும், பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள், திரையுலகப் பிரமுகர்கள் என்று மூன்றுநாள் கலக்குவார்கள்; இம்முறை எதிர்வரும் சூலைத் திங்கள் நியூயார்க் மன்ஹட்டன் மையத்தில் 19ஆவது திருவிழாவை நியூயார்க் தமிழ்ச்சங்கத் தலைவர் நடராஜன் ரத்தினம் தலைமையில் அமர்க்களமாக நடத்த பிரம்மாண்ட இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான வேலைகளைச் செய்துவருகின்றனர்.

திரையுலகிலிருந்து சரத்குமாரும் ராதிகாவும் சிறப்புவிருந்தினராகவும், சிறப்புரையை கவிஞர்.வைரமுத்து மற்றும் திரைகடல் ஓடிவந்தது பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா? என்ற பட்டிமன்றம், முனைவர் அறிவொளியை நடுவராகக் கொண்ட பட்டிமன்றமும் முனைவர்கள் கிராமியப் பாடல்கள் புகழ் விஜயலட்சுமி நவனீதகிருஷ்ணன் குழுவினர், வாணி ஜெயராம், ரீஷ் உடபட திரைப் பாடகர் குழுவும் வெண்ணிற ஆடை மூர்த்தி போன்றோரும் வந்து கலக்க இருக்கின்றனர்.
இதில் ஒரு விசேடம் என்னவென்றால் பட்டிமன்ற நடுவர் மட்டுமே தமிழகத்திலிருந்து! அமெரிக்காவில் உள்ள தமிழர்கள்தான் பட்டிமன்ற அணிப் பேச்சாளர்கள், கவியரங்கக் கவிஞர்களாக முகம் காட்டும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்.
அமெரிக்காவில் 50 மாநிலங்கள்! ஏறக்குறைய அனைத்திலும் சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ ஆங்காங்கே தமிழ்ச் சங்கங்கள்; ஃபெட்னா எனப்படும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புடன் பதிவு செய்துகொண்ட சங்கங்கள் மட்டும் 25. பதிவுறாமல் பல சங்கங்கள் ஒரே மாநிலத்தில் இரண்டு, மூன்று, நான்கு என்று இயங்கிக்கொண்டிருக்கிறது. (சிகாகோவில் மட்டும் நான்கு தமிழ்ச் சங்கங்கள்) கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒன்றிலிருந்து பிளவுபட்டு இன் னொன்று என்று தமிழ்ச்சங்கங்கள் ஒரு பக்கம் பெருகினாலும் தமிழ் வளர இவை பாடுபடுகின்றனவா? என்றால் அது கேள்விக்குறிதான்???

இத்தாலியர் தங்களுக்கென்று ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் கீழ் இயங்குகிறார்கள். ஐரிஷ்.....இப்படி எந்த நாட்டினரானாலும் ஏன், தெலுங்கர், மலையாளி, கன்னடர்..என்று ஒரே ஒரு அமைப்பை ஏற்படுத்தி ஒற்றுமையாகச் செயல்படுகிறார்கள். தமிழர்கள் மட்டும் தனித்தனியாக பிரிந்து சங்கங்களைத் தொடங்கி நடத்துகிறார்கள். தமிழனை யாராலும் அழிக்க முடியாது; தமிழனைத் தமிழனே அழித்துக்கொண்டாலே தவிர...என்ற நம் பெரியவர்கள் அனுபவித்துச் சொல்லிச் சென்ற வரிகள் எனக்குள் எழுகிறது!

பெரும்பாலான தமிழ்ச் சங்கங்கள் பொங்கல், தீபாவளி, தமிழ் வருடப் பிறப்பு போன்றவற்றை அந்த வார இறுதியில் வரும் சனி, ஞாயிறுகளில் அவரவர் வீடுகளில் தயாராகும் சிறப்பு உணவு வகைகளை எடுத்துவந்து திரைப் பாடல்களுக்கு ஏற்றபடி குழந்தைகளை ஆட வைத்து ரசித்துவிட்டு, ஆங்கிலத்திலேயே அதற்கான வர்ணனையும் கொடுத்துவிட்டு, பரிசுகளை வழங்கி ஆடற்கலைஞர்களைக் கௌரவப்படுத்திவிட்டு விதவிதமான கலவை சாதங்களை ஒரு கைபார்த்துவிட்டுக் கூடிக் கலையும் தமிழ்ச் சங்கங்களை மிக அதிகமாகப் பார்க்கலாம்.
இவை தவிர வருடத்தில் ஓரிரு சிற்றுலாக்கள் தப்பித் தவறி தமிழகத்திலிருந்து குச்சுப்பிடி நடன நிகழ்ச்சியோ பரதநாட்டிய நிகழ்ச்சியோ பக்கத்து நகரத்துத் தமிழ்ச்சங்கத்தில் நடந்தால் இவர்களும் வரவழைத்து அதுவும் தமிழ்ச்சங்க நிகழ்ச்சியாக நடைபெறும்.
தமிழகத்திலிருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தவருக்குத் தாம் தமிழில் பேசுவதா? ஆங்கிலத்தில் பேசுவதா? என்ற குழப்பம் நிகழ்ச்சி தொடங்கும்போது ஏற்படும்; ஆனால் தலைவர், வரவேற்புரை நிகழ்த்துபவர்கள் எல்லாம் மருந்துக்குக்கூட தமிழைப் பயன்படுத்தாமல் ஆங்கிலத்தில் நளினமாகப் பேசியதிலிருந்தே தாமும் ஆங்கிலத்தில் பேச முடிவு செய்து, 'வணக்கம்' என்றோ 'நன்றி' என்றோ இரண்டு வார்த்தைகளை தமிழில் அட்டகாசமாய்ச் சொல்லி அமர்ந்துவிடுவார்கள்.
தன்னார்வலர்கள் தமிழாசிரியர்களாக (ஆசிரியர்கள் அல்ல) ஆங்காங்கே உள்ள தமிழ்க் குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு வார விடுமுறை நாட்களான சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ் கற்பித்து வருகின்றார்கள். (நானும் கூட அப்படித்தான் வலியக் கூப்பிட்டு என் வீட்டில் வைத்தே சொல்லிக் கொடுத்தேன்.) தொடக்கத்தில் சிறுவர் சிறுமியர் காட்டும் அக்கறை போகப் போகக் காட்டுவதில்லை. இதற்குக் காரணம், பெற்றோர்களே!

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கத்தின் தகவல்தொடர்பு இயக்குநரான வி.ஜே.பாபு, கடந்த 3 வருடங்களாகத் தாய்த் தமிழ்ப் பள்ளிகளைத் தொடங்கி சில மாநிலங்களில் நடாத்திவருவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தாய்த் தமிழ் பள்ளிகள் நடாத்திவரும் தியாகுவிடமிருந்து தமிழ்ப் புத்தகங்களை வாங்கி இந்தப் பள்ளிகளுக்கு அளித்து ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை அறிமுகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பள்ளிகளுக்கு ஆதரவு எப்படி இருக்கிறது? என்று பாபு அவர்களிடம் கேட்டபோது, "இல்லிநாய்ஸிலும்(சிகாகோவில்) விஸ்கான்சினிலுமாக ஏழு தமிழ்ப் பள்ளிகள் வாரந்தோறும் சனி அல்லது ஞாயிறு நாட்களில் நடந்து வருகிறது. ஏழு பள்ளிகளில் பள்ளிக்குக் குறைந்தது 40 பிள்ளைகள் என்ற அளவில் படிக்கின்றனர். சின்சிநாட்டியிலும் மிசவுரியிலும் அடுத்த ஆண்டு தொடங்கவிருப்பதாகவும் தெரிவித்தார். மெல்ல மெல்லத்தான் ஆர்வம் உள்ளவர்களை உள்ளிழுத்து இதைச் செய்யவேண்டி இருக்கிறது என்று அதன் சிரமங்களைச் சிலாகித்தார். தமிழர்களை ஒற்றுமைப்படுத்தி ஒரு காரியத்தில் ஈடுபட வைப்பது என்ன சாமான்ய விடயமா, என்ன?

நாளும் பெருகிவரும் அமெரிக்கா வாழ் தமிழர்களின் குழந்தைகளுக்குத் தமிழ் மற்றும் அதன் கலாச்சாரத்தைப் போதிக்க வேண்டியது மிக அவசியமான அத்தியாவசிய தேவையாகும். ஃபெட்னா என்றழைக்கப்படும் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு இதற்காகத் தொலைநோக்குப் பார்வையோடு திட்டமிட்டு ஒரு தமிழ்ப் பல்கலைக்கழகத்தையும் கலாச்சார மையம் ஒன்றினையும் அமெரிக்காவின் மையப் பகுதியில் தொடங்க வேண்டுமென்று திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த மையம் அமெரிக்க வாழ் தமிழ்ச் சமுதாயத்தை இணைக்கும் தமிழ்ப் பண்பாட்டு மையமாகத் திகழும் சாத்தியம் உள்ளது. தாய்த் தமிழகத்தோடு ஒரு உறவுப் பாலமாக இந்த மையம் அமைந்தால் அமெரிக்கத் தமிழர்களுக்கு, குறிப்பாக அவர்தம் மழலைச் செல்வங்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்!

தமிழ் இணையப் பல்கலைக்கழகம் கலிஃபோர்னியாவில் உள்ள தமிழ் அகாதெமி நடாத்திவரும் ஒருவரைத் தலைவராகக் கொண்டு அமெரிக்காவில் தமிழ் வளர்க்க ஒரு ஒப்பந்தம் செய்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த கோலமாக நடந்த இந்த ஒப்பந்தம் உருப்படியாக ஒன்றும் செய்யாமல் முடங்கிக் கிடக்கிறது. இணையத்தில் தமிழ் ஆர்வலர்களாய் செயல்படும் எவ்வளவோ பேர்கள் மூலம் இதனை முன்னெடுத்துச் சென்றிருந்தால் இன்றைக்கு அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலத்திலும் இது காலூன்றி கொஞ்சம் கொஞ்சமாய் தமிழ் வாழ வளர வழி கிட்டியிருக்கும்!
இதன் நிர்வாக இயக்குநராக, கல்வி வணிகம் செய்யும் ஒரு பெண்மணி! அதுவும் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்! அவர் எப்படி இதன் வளர்ச்சிக்கு முன்னெடுப்பார் என்று கருதிப் போட்டார்கள் என்று தெரியவில்லை; அவருடைய கல்வி வணிக நிறுவனத்தைக் கவனிப்பாரா? இதுபோன்ற பொதுநலப் பணிகளில் கவனம் செலுத்த அவருக்கு நேரம் இருக்குமா? இவருடைய பள்ளியில் இந்திய மொழிகள் பலவற்றைக் கற்பிக்கிறதில் தமிழும் ஒன்று; பெற்றோர் ஒருவரை விசாரித்ததில், கட்டணம் வாங்குகிற அளவுக்கு கவனமெடுத்துத் தமிழைச் சொல்லிக் கொடுக்க பயிற்சி பெற்ற ஆசிரியர் என்று எவரும் இல்லை. குறுவட்டைக் கொடுத்து வீட்டில் படித்து வாருங்கள் என்று அனுப்பிவிடுவதால் எங்கள் பிள்ளைகளை நிறுத்திக்கொண்டோம் என்று தமது வேதனையை வெளிப்படுத்தினார். நியூயார்க்கில் அவரைப் போட்டது கூட பரவாயில்லை!

அவரையே கனடாவிற்கும் ஏகபோக வாரிசாக நியமித்து அறிவித்தார்கள்! கனடாவில் எவருமே தமிழர்களோ, தமிழ் ஆர்வலர்களோ இல்லையா? இதனால்தான் அரசுத் திட்டங்கள் அதன் நோக்கம் நிறைவேறாமல் பாழ்பட்டுப் போகக் காரணமாகி விடுகிறது.
(Mrs. Brahashitha Gupta, Exec. Dir. Sishyaa Education Center (USA) School of India, Tamil School in New York, 40, Hillside Ave, Williston Park New York, USA. & Mrs. Brahashitha Gupta Exec. Dir. Sishyaa Education Center (CAN) School of India, Tamil School in Canada, Canada.) இன்றுவரை எந்த முன்னேற்றமும் காணாமல் கிடப்பில் கிடக்கிறது கொடுமையான வேதனை! இவர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்ள ஒரு அடையாளம் தேவைப்படுகிறது. அதை வைத்துத் தங்களைத் தமிழகத்தோடு தொடர்புடைய ஒரு முக்கியஸ்தர் என்று விளம்பரித்துக்கொள்ள இயலும்!
தமிங்கிலச் சங்கங்கள்.....!

சில பெற்றோர்கள் என் பிள்ளை இங்கே தமிழ் படித்து என்ன செய்யப் போகிறான்? என் பிள்ளைக்கு வீட்டில் தமிழ் பேசினாலே பிடிப்பதில்லை என்று பெருமையாகச் சொல்ýக்கொள்ளும் அருமைப் பெற்றோர்கள்! இதில் வெட்கக் கேடு என்னவென்றால் அப்படிச் சொல்பவர் ஒரு தமிழ்ச் சங்கத்தின் செயலர்!? அதற்கு காரணம் அவர் தமிழர் அல்ல. தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டு சென்னையில் குடியேறியவர். அதனால்தான் அவருடைய தமிழ்ப் பற்று அப்படி இருக்கிறது.

சில தமிழ் சங்கங்களில் பொறுப்பாளர்களைப் பார்த்தால் தமிழுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை. அவர்கள் பொறுப்பாளர்களாக இருப்பார்கள்; அவர்கள் பெயரைப் பார்த்தாலே அவர்களுக்கும் தமிழுக்கும் உள்ள தூரம் எவ்வளவு என்று தெரியும்? சரி. இவர்களுக்கு எதற்கு தமிழ்ச் சங்கம் என்ற போர்வை? கொஞ்சம் ஊன்றிக் கவனிக்கும்போது அப்படிப் பொறுப்பாளர்களாய் இருப்பவர்களுக்கு சுய தேவை இருப்பதை அறிய முடிந்தது. ஒருவர் பொறுப்புக்கு வந்தவுடன் இலவச திரைப்படம் காட்டுகிறோம் என்ற சுற்றறிக்கையை அனுப்பினார். அமைப்பில் உள்ளவர்கள் அகமகிழ்ந்துபோனார்கள். அடுத்த இலவசத்தில், சோடா, தின்பண்டங்கள் குறைந்த விலைக்குக் கிடைக்கும் என்று சிறுவியாபாரம். அடுத்து, திரைப்படங்கள் திரையரங்கில் கட்டணத்துடன் என்ற சுற்றறிக்கை. அதுதான் அவரது தொழில்!
பொறுப்புக்கு வந்தாச்சு; பொறுப்பாகப் பொருளும் சம்பாதிச்சாச்சா?
இன்னொரு பொறுப்பாளர் அவர் பெயரே வடமொழி வாடையோடு; குழந்தைகளுக்கு வாயில் வரா வடநாட்டுப் பெயர்கள்; இவர் தமிழ்ச் சங்க நிர்வாகி! இரண்டு மூன்று கூட்டங்கள் சத்தமில்லாமல் வந்து போனார். அடுத்த கூட்டத்தில் வாய்க்கு ருசியான தென்னிந்திய உணவு வகைகள்; இன்னின்ன உணவு இவ்வளவு விலை என்று ஒரு சுற்றறிக்கை. ஆக... அடுத்த கட்டமாக உங்கள் வீட்டுக்குத் தேவையான உணவு வகைத் தேவைகளுக்கு எங்களிடம் சொன்னால் உங்கள் இல்லத்திலேயே கொண்டுவந்து தருவோம் என்று!

இவர் வீட்டிலேயே உணவு தயாரித்து சுயமாக தொழில் செய்யும் கனவுக்கு பாலம் அமைத்துக் கொடுத்திருப்பது தமிழ்ச் சங்கம் என்ற உண்மை தெரியவந்தது. சரி, இது தலைவருக்குத் தெரியாதா?
தலைவருக்கு தொலைபேசினால் தமிழ் பேச வராது; ஆங்கிலம்தான்! என்ன செய்யிறது பிறந்தது வளர்ந்தது எல்லாம் மும்பையில்! அப்புறம் நேரே யு.எஸ். வந்துட்டோம். எதோ வீட்டில் எங்க அப்பா, அம்மா பேசிய தமிழ் கொஞ்சம் கொஞ்சம் மலரும் நினைவுகளாக...என்று சொல்லி கொசுறாக இப்பப் பாருங்க என் மகனோ மகளோ தமிழே தெரியாது. வீட்டிலயும் பேசுறது இல்லையா? என்று பெருமையாகத் தகவல் சொல்லும் இவர் ஒரு மருத்துவர்! கோவில் அறங்காவலர் போன்ற பல பதவிகள் இவருக்கு!

நாலைந்து வருடங்களுக்கு முன்பு, பொங்கல் விழாவைப் பற்றிப் பேச அழைத்திருந்தனர் என்னை. நான் பொங்கல் விழாவைப் பற்றி பேசத் தொடங்கிய கொஞ்ச நேரத்தில் பெண்கள் பகுதியிலிருந்து சிலர் பேச...அது அப்படியே ஆண்கள் பகுதியிலும் ஆரம்பித்து சலசலவென்று பேசிக்கொண்டிருந்தனர். சரி, சுருக்கமாய்ச் சொல்லி நிறுத்திவிடலாம் என்று நான் நினைத்தபோது, பலமான கரவொலி. இடைஇடையே எழுந்த கரவொலிகள்...யார் கேட்டாலும் கேட்காவிட்டாலும் தொடர்வது என்று தண்ணீரை மடக்..மடக் விட்டுக் கொண்டு தொடர்ந்தேன். பொதுவா கல்லூரிகளில்தான் பேசவேண்டாம் உட்கார் என்பதற்கு கரவொலி எழும்! அது போலவா? என்று கவனித்தபோது கரவொலிக்குச் சொந்தக்காரர்கள், நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெரியவர்களிடமிருந்து. அந்த விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த சுமார் 300 பேர்களில் ஒரே ஒரு அமெரிக்கப் பெண், நான் பேசுவதைத் தம் தோழியிடம் ஆங்கிலத்தில் சொல்லச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தார். சரி, அவருக்காவது நம் கலாச்சாரப் பாரம்பரியங்கள் அறிமுகமாகட்டும் என்று பேசினேன். பேசி முடித்துவிட்டு நான் கீழிறங்கி வந்தபோது பல பெரியவர்கள் கரம் குலுக்கி எங்களுக்கே தெரியாத சில விடயங்களைக்கூட அழகாச் சொன்னீங்க என்று பாராட்டினார்கள்.

நம்மவர்களோ இது ஒரு சந்திக்கக் கிடைக்காத பொழுது, என்ற ரீதியில் தங்கள் சல சலப்பைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். நிகழ்ச்சி முடிந்து வெளியேறும்போது அமெரிக்கப் பெண் வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, உங்க தமிழ் கலாச்சாரம், பண்பாடு, விழாக் கொண்டாட்டங்கள் எவ்வளவு அர்த்தமுள்ளது என்று அறியத் தந்தமைக்கு நன்றி என்றார். பின்னர் அவரால் வேறு ஒரு இடத்தில் போய்ப் பேசவேண்டிய அவசியம் எனக்கு வந்தது.

இதைவிடக் கொடுமை தமிழ்ச் சங்க நிர்வாகிகளில் பெரும்பாலும், வேலைக்குப் போகாத வீட்டில் இருக்கும் பெண்கள். இவர்கள் தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகளுக்குச் சில பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள். ஒருவர், நடனத்துக்கு! இன்னொருவர் உணவுக்கு...இப்படியாக. இவர்கள் தமிழ்க் குடும்பங்களைத் தொலைபேசியில் அழைப்பார்கள். எப்படி? எல்லாம் நுனிநாக்கு ஆங்கிலம்தான்! பொது இடங்களில்தான் தமிழில் பேசுவது கௌரவக் குறைச்சல். தொலைபேசியில் தமிழ்க் குடும்பங்களோடு உரையாடும்போது கூடவா தமிழ் பேசக்கூடாது?

என் நண்பர் ஒருவர் இல்லத்தில் அவரது வயதான தாயார் இருந்திருக்கிறார். தமிழ்ச் சங்க.... இல்லை...இல்லை தமிங்கிலச் சங்கத்திýருந்து இப்படியானதொரு நுனிநாக்கு ஆங்கிலத்தில் அழைத்திருக்கிறார். நண்பரின் தாயாருக்கு ஒன்றும் புரியாததால்...'மகன் வீட்டில் இல்லையே ஒங்களுக்கு தமிழ் தெரியாதா எதேதோ பேசுறீங்களேம்மா... எனக்குப் புரியலையே...' என்று சொல்ல, அழைத்தவர், 'அப்படியா.. சரி.. நான் சாயாந்திரமாப் பேசறேன்' என்றாராம். 'ஏன்டியம்மா, நல்லாத் தானே தமிழ் பேசுற... நம்ப வீட்டுல பேசறப்பக் கூடவா வெள்ளக்காரன் பாசையில பேசோணும்?'ன்னாங்களாம். உடனே தொலைபேசியைத் துண்டித்துவிட்டாராம். நண்பர் சொல்லிச் சிரிப்பார்.

இதனால் எதிர்காலத்தில் எத்தகைய நிகழ்வுகள் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் உண்டு என்பதைச் சிந்தித்துப் பார்ப்பது தற்காலத்துக்கு மிகவும் அத்தியாவசியமாகிறது.தமிழகத்தில் மூவேளை உழைத்து ஒருவேளைக் கூழுக்குத் தவிக்கும் குடும்பங்கள் எத்தனை எத்தனையோ!? ஒரு தமிழ்நாட்டுக் கிராமத்தைத் தத்து எடுத்து அந்தக் கிராமம் முன்னேற உதவி செய்யலாமே? ஆனால், வாரம் தவறாமல் ரொட்டியில் வெண்ணெய் வைத்து ஜாம் வைத்து, பொட்டலங்கள் தயாரித்து சாப்பிட வழி இல்லாமல் தவிக்கும் அமெரிக்கவாசிகளைத் தேடிப்போய் கொடுக்கும் தாய்க்குலங்களின் சமூகப் பணிகள் ஒவ்வொரு வாரமும் கர்ணசிரத்தையாய் அரங்கேறும்!
இதில் தமிழைப் பேசப் படிக்க எழுத தம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க ஏது நேரம்?

மெல்லத் தமிழினி.....!?

'தாத்தா இருக்காங்களா?' என்று தெரியாத்தனமாய் தமிழ்ச் சங்க நிர்வாகி ஒருவரின் மழலையைக் கேட்க,"What is that uncle? Is that a sweet? I don't know. Tell me in English" என்கிறான். எந்தச் சுவரில் போய் முட்டிக்கொள்வது?
வெளிநாட்டில் வந்து குடியேறும்போது நாகரிகம் என்கிற புறம் மாறலாமே தவிர, பண்பாடு என்கிற அகம் மாறக்கூடாது. வீட்டுக்கு வெளியே தமிழைப் பேசாவிட்டாலும் வீட்டுக்குள் தங்கள் குழந்தைகளிடம் தமிழ் பேசுவதற்கு பெற்றோர்கள் முன்வரவேண்டும்!
மெல்லத் தமிழ் இனி இங்கு மறையுமோ? தமிழகத்திலேயே தமிங்கிலமாக இருக்கும்போது அமெரிக்காவில் வெல்லத் தமிழ் மெல்ல வளர, இங்குள்ள தமிழ் அமைப்புகள் ஒன்று சேர்ந்து இயங்கினால்தான் உண்டு!

தேசம் கடந்து வந்த பின்னர் வீட்டில் கூட தம் தாய்மொழியைப் பேசாமல் ஆங்கிலத்திலேயே உரையாடுவது குழந்தைகளுக்கு இரட்டை மொழிக் குழப்பம் வந்துவிடும் என்று நொண்டிச் சமாதானத்தை
சொல்லி" க்கொண்டே தங்கள் வாழ்க்கையில் கோணல் புள்ளிக்கோலம் போடுகின்றனர்.

மேலை தேசக் கலாச்சாரங்களுக்கு இடையில் இந்த நொடியின் நவீன தொழில்நுட்பங்களின் வசதி வாய்ப்புகளோடு தங்கள் வாழ்க்கையை அறிந்தோ அறியாமலோ அமைத்துக்கொள்ளப் பழகிக் கொண்டாலும் அடிப்படை மனப்பாங்கைப் பொறுத்தவரை மாற்றம் பெறாதவர்களாகவே இருக்கிறார்கள் பலர்!
பதவிகளில் நாட்டம், தம்மைக் குமுகாயத்தில் தம் பண்பாட்டுக்கு உதவாத செயல்களில் முதன்மைப்படுத்துவதில் ஆர்வம், சாதிமதப் பாகுபாடுகளைக் கட்டிக் காக்கும் இன்னொரு வகையான போக்கு எது சரி? எது தவறு என்று உய்த்து உணராது சாரும் இயல்பு நிலை, கூடுமிடங்களில் சம்பந்தமில்லாத விடயங்கள் குறித்து தர்க்கம் புரிதல், நகைகளிலும் உடைகளிலும் கவனச் சிதறல்கள், தமிழ்த் திரை மெகா நட்சத்திர மோகங்கள், தமது இனத்துக்குள்ளேயே போட்டா போட்டி போன்ற தமிழக நிகழ்வுகள் போன்றே இங்கும் நிகழ்த்திக் காட்டுபவர்களாகவே இருப்பதும் வருந்தற்கு உரியது.
இங்குள்ள ஆலய உற்சவங்களிலோ, தமிழ்க் கலாச்சார விழாக்களிலோ கலந்துகொள்கிற தமிழர்கள் பலர் தாங்கள் அங்கு வந்த நோக்கத்தையே மறந்து தங்களுக்குள் உரையாட, உறவாடக் கிடைத்த அரிய வாய்ப்பாகக் கொண்டு அந்த இட அமைதியைக் குலைத்து கண்ட இடங்களில் உணவருந்தி அந்த இடத்தை அசுத்தப்படுத்துவதில் தங்களுக்கு நிகர் எவருமில்லையென்று நிரூபிக்கிறார்கள்.
ஆகவே நாடுகள் கடந்து, கடல் கடந்து வந்தாலும் தமிழர்கள் மத்தியில் தமிழ் மேம்பாட்டுக்கான, தமிழ்க் குமுகாயத்துக்கு என்றில்லாமல் இருந்துவருகின்ற நிலைதான் பரவலாகக் காணப்படுகிறது.
தமிழர் பண்பாடுகள், கலாச்சாரம், தாய்மொழி என்று பால்போல் பொங்கும் சில தமிழ் ஆர்வலர்களைக்கூட ஏற்கெனவே இருக்கிற தமிழர்கள் இனிமேல் என் பிள்ளை தமிழ்நாட்டில் போய் என்ன சாதிக்கப் போகிறான்? இல்லை வேலைதான் பார்க்கப்போகிறானா? என்று மார்தட்டும் பெற்றோர்களுக்கு இடையில் சுலபமாக நுழைந்து வெற்றி கண்டிருப்பது என்னவோ தமிழ்ச் சினிமா மோகம்தான்!

நுனிப்புல் மேய்ச்சல்...!

இதற்குக் காரணம் என்ன? சற்று கொஞ்சம் பின்னோக்கிப் பார்க்க வேண்டும். மெட்ராஸ் மாகாணமா இருந்தப்ப தெலுங்கர், கன்னடம் பேசுவோர் எல்லாம் சென்னப்பட்டினம் அதைச் சுற்றிலும் வசித்தார்கள்.
பெயர்மாற்றப் போராட்டம் எல்லாம் நடந்து தமிழக எல்லை வரையறுக்கப்பட்ட பின்னரும் வாழ்க்கை வசதி வாய்ப்புகளுக்காக இவர்கள் தமிழகங்களில் தங்கிவிட்டனர். தங்கினாலும் அவரவர் மொழிகளே அவரவர் வீடுகளில் பேசப்பட்டது. காலப்போக்கில் இவர்கள் தமிழகத்திýருந்து தமிழர் என்ற போர்வையோடு அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் குடியேறினர்.
இவர்கள் உறவுகள் நண்பர்கள் என்ற வட்டங்களில் வரும்போது தமிழ்ச் சங்கங்களிலும் உறுப்பினர்கள்; தெலுங்கு சங்கங்களிலும் உறுப்பினர்கள். இவர்களுக்குத் தமிழ் பேசப் பிடிக்கும்; தமிழ் நிகழ்ச்சிகளைப் பிடிக்கும். தமிழில் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்ற கோட்டுக்குள் மட்டும் சிக்கமாட்டார்கள். தமிழ்ச் சங்கம் இவர்களுக்கு நுனிப்புல்!
இவர்கள் தமிழ்ச் சங்கப் பொறுப்புகளில் ஒட்டிக்கொண்டு இருக்கும்வரை தமிழ்ச் சங்க நிகழ்வுகள் ஒரு பொழுதுபோக்கு அம்சங்களுக்கான திசைகளில் மட்டுமே செல்லக்கூடியதாக இருக்கும்.
வெறும் சினிமா நடிகர்களையும், நாட்டிய நடனங்களையும் கொண்டுவந்து அறிமுகப்படுத்துவதைக் காட்டிலும் தமிழ் வளர, வாழ தமிழ் பண்பாடு சிதைந்து போகாமல் இருக்கத் தமிழில் ஆர்வமூட்டும் பேச்சாளர்களை வரவழைத்து தமிழ்க் குடும்பங்களை முக்கியமாக அவர்தம் குழந்தைகள் அடங்கிய கூட்டத்தில் தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தத் தமிழ்ச் சங்கப் பொறுப்புகளில் இருக்கும் தமிழர்கள் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
இல்லையென்றால் தமிழ்ப் பண்பாடு கலாச்சாரம், நாகரிகம், ஏன் பெயரைக் கூட தொலைத்து விட்டு பலநாடுகளில் நிற்கிற நிலைதான் ஏற்படும்.
Valaydon..... Triwanncat Thancanamut ' இந்தப் பெயர்களை உச்சரிக்க முடிகிறதா? "வேலாயுதன்"... 'திருவேங்கடம் தங்கமுத்து' என்ற தமிழ் பெயர்தான் அப்படி நைந்து சிதைந்து நாறாகியிருப்பது தெரிந்தது. ரட்னம்... இது ரத்தினம்.
chantra mokan(சந்திர மோகன்), Munchame chetty (முனுசாமி செட்டியார்) ஆஃப்பிரிக்காவில் பல்லாயிரம் பூர்வீக தமிழர்கள் திருநாமம் இப்படித்தான்!
எதிர்காலத் தமிழர்கள் குழந்தைகள் பெயர்கள், ஆப்பிரிக்கத் தமிழர்கள் போன்றே மாறலாம்; இப்போதே ஆண்டியப்பன் ஆண்டியாகவும், சாமியப்பன் சாம் ஆகவும் ஒலிக்கத் தொடங்கிவிட்டதைக் கேட்கிறோமே?
ஸ்பானிஷ் ஆதிக்கம்...!

அமெரிக்காவில் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் மொழி ஸ்பானிஷ்! இதற்குக் காரணம் தென் அமெரிக்க நாடுகளான சிலி, கொலம்பியா, பிரேசில், பெரு உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து கடவுச்சீட்டோடும், கள்ளத்தனமாகவும் அமெரிக்காவில் வந்து குவிந்தவர்கள் தங்கள் மொழியான ஸ்பானிஷ் மொழியிலேயே பேசினர். படிக்கவும் எங்கள் மொழியே என்பதில் உறுதியாக இருந்தனர்.
கடந்த நாற்பது ஆண்டுகளில் அவர்கள் அமெரிக்காவில் ஸ்பானிஷ் மொழியை இரண்டாவது மொழியாக்கிவிட்டனர். எந்த விண்ணப்பப் படிவத்தை எடுத்தாலும் ஆங்கிலம் ஸ்பானிஷ்.... மருத்துவமனைகள் மொழி மாற்றுனர்களை வேலைக்கு வைக்க வேண்டிய நிர்பந்தங்களுக்கு இன்றைக்கு ஆளாகிவிட்டனர்!

தொலைபேசியில் ஆங்கிலத்திலும் ஸ்பானிஷ் மொழியிலுமே தகவல்கள் என்று தனது ஆதிக்கத்தை வளர்த்துவிட்டார்கள். அமெரிக்காவின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடி வரை ஆங்கிலமே என்றிருந்த பூமியில் ஆலம் விழுதாய்க் கிளை பரப்பி இன்றைக்கு ஸ்பானிஷ் இரண்டாம் இடத்தில் கோலோச்சும் நிலை வந்துவிட்டது!
தமிழ் அந்த அளவு கோலோச்சாவிட்டாலும், இல்லங்களிலும் தமிழ் அமைப்புகளிலும் தமிழிலேயே பேசுவோம்; இங்குள்ள பல்கலைக்கழகங்களில் இந்தி, தெலுங்குக்கு துறைகள் இருப்பது போல தமிழுக்கும் துறைகள் ஏற்படுத்திடவும் முனைப்பாக இருந்தால் மெல்லத் தமிழ் வளரும் இங்கும்!
இணையத்தில்....!

இன்னொரு புறம் பார்த்தால், தமிழகத்தில் எந்த நாளிதழ்களிலும், வார மாத இதழ்களிலோ எழுதிப் பழக்கப்படாதவர்கள் அமெரிக்காவிற்கு வந்த பிறகு இணைய இதழ்கள், அச்சு இதழ்களுக்கு எழுதுபவர்கள் இருக்கிறார்கள்; தமிழில் முதலில் எழுதத் தயங்கிப் பின் மெல்ல மெல்ல தமிழ் எழுத்துருக்களைப் பாவித்து மடலாடற் குழுமங்களில் சக்கை போடு போடும் தமிழ் ஆர்வலர்கள் இருக்கிறார்கள்; தமிழ் நெட், தமிழ் உலகம், அகத்தியர், மரத்தடி, அன்புடன் (ஆங்கிலக் கலப்பில்லாமல் தமிழில் மடலாடல் செய்வதில் உறுதியான குழு) போன்ற தமிழில் மடலாடல் செய்யும் குழுமங்களில் இவர்களின் பங்களிப்பு குறிப்பிடும்படியாக இருக்கிறது.

இணையத்தில் நூல் வெளியிடலாம்; நூல் வெளியிடும் விழா நடத்த முடியுமா? வேறு எந்த மொழிக்கும் கிடைக்காத பெருமை தமிழுக்கு வாய்த்தது! தமிழ் உலகம் மடலாடற்குழுவில் உலகளாவிய நூல் வெளியீட்டு விழா இணையப் பந்தலில் கனடா வாழ் கவிஞர் புகாரியின் கவிதை நூல் வெளியிடப்பட்டது. இது தவிர வலைப்பூ, வலைப்பதிவு எனப்படும் பதிவுகளில் தங்கள் கதை, கட்டுரை, கவிதைகள் என்று தங்களுக்கு எது விருப்பமோ, அதை அழகாக வடிவமைத்து தமிழை உலகத் தமிழர்கள் உவந்து படிக்க முன்னிடுகிறார்கள். தேர்ந்த கட்டுரையாளர்கள், கதை புனைவோர், கவிதை நெய்வோர் இவர்களெல்லாம் புத்தகங்கள் அச்சில் வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவிýருந்து இணைய இதழ்கள் வெளிவந்தாலும், அச்சில் "தென்றல்" இதழ் வருகிறது. ஆங்காங்கேயுள்ள சில விரல்விட்டு எண்ணும்படியான தமிழ் சங்கங்கள் மாத இதழ் வடிவமைப்பில் பிரசுரிக்கிறார்கள்.

அமெரிக்காவில் இந்தியர்கள் தனி மாநிலம் அமைக்கும் அளவுக்கு அதிகரித்துவிட்டார்கள். அதுமட்டுமல்ல. அவர்கள் கால் பதிக்காத...கைபடாத துறையே இல்லை எனும் அளவுக்கு அங்கிங்கெனாதபடி எங்கும் இருக்கிறார்கள். இதில் தமிழர்கள் ஒரு இலட்சத்து இருபதாயிரம் பேர்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது. இதோ ஒரு சிறு கண்ணோட்டம்:-அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள்:- 3.23 மில்லியன் இதில் மருத்துவர்கள் :- 22%விஞ்ஞானிகள் :- 21%மென்பொருள் மற்றும் வன்பொருள் வல்லுநர்களாக பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள்.......................................:- 28% (இதில் மைக்ரோ சாஃப்ட் ஊழியர்கள்:- 9%(கணினி வல்லுநர்கள்) ஐபிஎம் ஊழியர்கள் :- 6%)
இதர பணிகளில் ஊழியர்கள் 5%சுய தொழில் புரிபவர்கள் (பாறைநெய்(பெட்ரோல்) நிரப்பு நிலையங்கள், பலசரக்குக் கடைகள், உணவு விடுதிகள், தங்கும்விடுதிகள் உட்பட..).....................7%
கிரீன் கார்டு உள்ள இந்தியர்கள் 17%
இதில் தமிழர்கள் மட்டும் 14%தெலுங்கர்கள் 26%நிரந்தரக் குடியுரிமை பெற்ற இந்தியர்கள் 22%இதில் தமிழர்கள் 11% .

மொழி ஆழமானது. பிரபஞ்சம் போல் விசாலமானது. தாய் மொழி என்பது ஆயிரமாயிரம் மூலிகைகளை அலசிப் பிழிந்து, நூறு வகை மண்களில் புரண்டு அவற்றின் ஆற்றல்களை உண்டு, ஆறாக இறங்கிப் பூமியின் உள்ளும் புறமும் இயங்கி நமக்குக் கிடைக்கும் நீர்!

தாய்மொழி ஒரு இனத்தின், தன்மானத்தின் வடிவம். தாய்மொழியை இழந்த இனம் தன்மானத்தை இழந்து அழியும். எனவேதான் உலகெங்கிலும் ஒரு இனத்தின் எழுச்சி என்பது தாய்மொழி எழுச்சியிலிருந்து தொடங்குகிறது. உலகின் மூத்த மொழி தமிழ் மொழி!
வளமான மொழி. உலக அறிவை எல்லாம் உள்வாங்கிக் கொள்ளும் விரிவும், நிகிழ்வும், ஆற்றலும் கொண்ட மொழி. பேசும் இனத்தின் ஆசைகளையும், தேவைகளையும், சாதனைகளையும், இயக்கங்களையும் காலத்தோடு திரட்டிக்கொண்டே வளர்வது அது!

எழுத்தில் அடங்காத நுட்பமான ஒலிகள், தொனிகள், உணர்வுகள். இவற்றின் நெளிவு சுளிவுகள், குறுக்கல் நீட்டல்கள் என மொழியின் இழைகளும் பிசிறுகளும் கூட மொழியிலிருந்து பிரிக்க முடியாதவை.
காலங்காலமாக மொழியில் சேரும் தொன்மங்கள், சொலவடைகள், பழமொழிகள், அறிவுரைகள், வட்டாரச் சிறப்பு வழக்குகள், இப்படி வாழும் மொழியில் வசப்படாத உயிர்க்கூறுகள் ஏராளம்.

"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்றும், "வானம் அளந்தனைத்தும் அளந்திடும் வண்மொழி!" என்றும் பாரதி போற்றிப் பாராட்டிப் பாடும் தகுதி உள்ள மொழி தமிழ் மொழி!

இத்தனை சிறப்புகளைக் கொண்ட மொழியைத் தமிழக மக்கள் உலகில் எங்கு சென்றாலும் அனைவரும் பேசவும் எழுதவும் வேண்டும்; அவர்தம் மழலையர்க்குக் கற்றுத் தருதல் வேண்டும். இல்லங்களில் தமிழ் பேசும் உள்ளங்களாகத் திகழ வேண்டும். தமிழகத்தில் அறிவொளி இயக்கம் தமிழகத்தில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த முனைப்புடன் செயல்படுவது போல உலகத் தமிழர்கள் அவரவர் வாழும் பகுதிகளில் தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கத் தமிழ் அமைப்புகள் ஆவன செய்ய வேண்டும்.
அமெரிக்க வாழ் தமிழர்களின் குழந்தைகள் இளையர்கள் பலவிதமான பண்பாட்டுச் சிதைவுகளில் சிக்கிக் கலாச்சாரம் சிதைவுறுகின்றது. தாய்மொழி சிதைவுறுகின்றது. உறவுகளில் வைத்திருந்த பாசம் சிதைவுறுகின்றது. தற்காலிகமான அந்நிய மண் வாழ்வுச் சுகத்தில், சொந்த மண்ணின் பற்று சிதைவுறுகின்றது. ஒட்டுமொத்தமாக, அந்நிய மண்ணில் வாழும் இளைய தலைமுறையினர் எல்லோருமே இப்படித்தான் இருக்கிறார்கள் என்றில்லை.

விதிவிலக்காகப் பல இளந் தலைமுறையினர் நமக்குப் பெருமை சேர்ப்பதுவும் குறிஞ்சிப்பூவாய்! நெருஞ்சிப்பூவாய் நம்மை குத்திக் கிழிக்கும் விடயம், தம் பிள்ளையரின் தமிழறிவை மழுங்கடிக்கும் வகையில் பெற்றோரே நடப்பது என்னவோ மரத்திலிருந்து விழுந்தவரை மாடேறி மிதித்த கதையாய் ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற பதற்றம் இயல்பாய் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

"நிரந்தரம் இல்லாத வேற்றுநாட்டில் தாய்மொழியை மறக்க முற்படுபவர்களையும், மறந்தவர்களாக நடிக்க விளைபவர்களையும் மொழியின்பால் விருப்பற்ற பெற்றோர்களின் தாய்மொழியை அறிய முடியாத சிறார்களையும் நம் தாய்நாடு என்ன நிலையில் வரவேற்றாலும் அங்கே இவர்களின் நிலை எதிர்காலம் எப்படி அமையப் போகிறது என்பதைப் பற்றிப் பெரும்பாலோனோர் அக்கறைப்படுவதாகவோ, வருங்கால வாரிசுகளின் எதிர்காலம் ஆகக் குறைந்தது தாய்மொழியின் அத்திவாரத்தில்தான் உருவாகமுடியும் என்பதைப் பற்றி உணர்ந்ததாகவோ தெரியாதது ஒரு துரதிருஷ்டமான விடயமாகும்" என்று புலம் பெயர்ந்த எழுத்தாளர் ஒருவர் புத்தாயிரமாண்டு புலர்ந்தபோது இணைய இதழ் ஒன்றில் எழுதி வருந்தியிருந்தது நினைவிற்கு வருகிறது.
வாழக்கை என்பதே முரண்பாடான நிகழ்வுகளின் கலவைதானே. நமது இளையர்கள் கட்டியெழுப்பும் எதிர்கால வாழ்க்கை என்பது, நமது கலாச்சாரத்திலிருந்து முரண்பட்டதாக அமையப் போகின்றதே என்கிற நிதர்சனச் சுடல்! உண்மையில்லை என்று எவராவது மறுத்துரைக்க இயலுமா?. தமிழ் பண்பாட்டில் வாழ்ந்த... வளர்ந்த பலருக்கே, வெளிநாட்டு வாழ்வின் போதையில் தள்ளாட்டம் போடும்போது, அனுபவம் குறைந்த இளைய தலைமுறையினருக்கு இந்த நிலை வருவதில் விழிகள் விரிய வியப்படைய என்ன இருக்கின்றது?

ஒரு குழந்தை தாய் மொழியைத் தொலைக்கிறபோது தன் நாட்டையும் பண்பாட்டையும் தொலைத்துவிடுகிறது. தமிழ்ப் பண்பாடுதான் உலகிலேயே பாதுகாப்பான பண்பாடு. எனவே, இதற்கு முன் இல்லாவிட்டாலும் இல்லத்தில் குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக்கொடுங்கள். இல்லங்களில் தமிழ் பேசினாலே குழந்தைகளுக்கு பாதித் தமிழ் வந்துவிடும்;

இதை ஒரு சங்கல்பமாக அந்தந்தப் பகுதி தமிழ் சங்கங்கள் எடுத்துக்கொண்டு அமெரிக்கத் தமிழர்கள் எல்லோரும் தமிழறிவு பெற்றவர்கள் என்ற நிலை மலரச் செய்யவேண்டும். அதற்கு அமெரிக்கத் தமிழர்கள் ஒவ்வொருவரும் பாடுபடவேண்டும். ஊருக்கு ஒரு இளைஞர் கிளர்ந்தெழுந்தாலே தமிழ் கற்றுக் கொடுத்தல் சாத்தியப்படும். நம் சிறார்க்கு தமிழ் வானம் வசப்படும்! எங்க அப்பா, அம்மா எங்களுக்கு எங்க தாய்மொழியைச் சொல்லிக் கொடுக்காமலே போய்விட்டர்கள் என்ற குற்றச்சாட்டு எதிர்காலத்தில் பிள்ளைகள் சொல்ல இடம்கொடுக்கலாமா?
தமிழ்மொழிபோல.....!

"யாதும் ஊரே, யாவரும் கேளிர்" பாடலைப் பாருங்கள். அது ஒரு சிறப்பான, தமிழருக்கே உரிய ஒரு பார்வையைச் சொல்கிறது. அங்கேதான் சிலம்பு முரண்படுகிறது. அது ஊழ்வினை விஞ்சிநிற்கும் என எந்திரமயமான நீதி பேசுகிறது. ஆனால் யாதும் ஊரே பாடலோ, பெரியோரைப் புகழ்வதோ, அதைவிடச் சிறியோரை இகழ்வதோ செய்யோம் எனப் பேசுகிறது. மேன்மையும் கீழ்மையும் வருவது ஊழ்வினையால் ஆனாலும் அது எமக்குப் பொருட்டல்ல என்பது சிறப்பல்லவா? வடமொழி மரபில் இந்தப் பார்வையைக் காணமுடியாது. இப்படிச் சொல்பவர் யார் தெரியுமா? தமிழை நன்கு புரிந்த தெரிந்த தமிழர் ஒருவரால்தானே இப்படிச் சொல்ல முடியும். இதைச் சொல்லியது ஒரு அமெரிக்கர்.

பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர். (அமெரிக்கர், தமிழ் பற்றால் ஒரு தமிழ்ப் பெண்ணை மணந்துகொண்டவர்) புறநானூற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Four Hundred Poems of War and Wisdom'என்ற இவருடைய நூலுக்கு 'ஏ.கே.ராமானுஜன் பரிசு' வழங்கப்பட்டுள்ளது.
கணினியில் தமிழில் எழுத மென்பொருள் செய்தவர்களில் முன்னோடி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி வேற்று மொழிக்காரருக்கு உள்ள தமிழ் ஈர்ப்பு, தமிழர்கள் பலரிடம் இல்லாமல் இருப்பது வேதனை தருவதாக உள்ளது. தமிழ் மொழியின் அருமை பெருமைகளை இன்னும் எவ்வளவு காலம் கால்டுவெல் சொன்னார், ஜி.யு.போப் சொன்னார் என்று மேனாட்டாரையே சொல்லிக்கொண்டிருக்கப் போகிறோமோ தெரியவில்லை.

வீட்டுக்குள் தமிழ் வளர்த்தால்
வீதியிலும் தமிழ் வளரும்..
வீட்டுக்குள் தமிழ் ஒலித்தால்
வீதியிலும் தமிழ் ஒலிக்கும்..!!

தமிழினை வாசித்துவளர மறந்த
தமிழ்ச் சமூகம்போன
தலைமுறையோடு போகட்டும் போகட்டும்..
அடுத்த தலைமுறையாவது
தமிழினை சுவாசித்து வளர்ந்திட
வகை செய்வோம்,தமிழ் வளர்ப்போம்..!!
பயிரைப் பற்றிச் சொல்லிக் கொடுப்பதை விட பயிரின் வளர்ச்சியைத் தடுக்கும் களையைப் பற்றித்தான் பேச வேண்டியதிருக்கிறது. அகற்றப்படவேண்டியது களைதானே!
ஆகவே பற்பல விடயங்களைப் பற்றிச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய கடப்பாடு இடம்பெயர்ந்து வாழவந்த தமிழர்களின் கரங்களில் இன்றைக்கு இருக்கிறது. தேசம் கடந்து வந்த பின்பு தமது குமுகாய மேம்பாட்டிற்கான சிந்தனை பெறவேண்டும்! ஞானம் பெறவேண்டும்!!
இல்லையென்றால் தேசங்கள் கடந்து வந்து தாங்கிய வேசம் வெளுக்க வெகுகாலமாகலாம்! பொருள் உங்களிடம் சேரலாம்; ஆனால் பொருள் (அர்த்தமற்ற) இல்லா வாழ்க்கையாகத்தான் இருக்கும்!ஆங்கிலம் பேசும் நாட்டில் தமிழுக்கு அவசியமில்லை என்று தங்கள் பிள்ளைகளை பிரெஞ்சு, ஜெர்மனி, ஸ்பானிஷ் போன்ற மொழிகளை விருப்பப் பாடமாக பயிலச் சொல்லி ஊக்கம் கொடுப்பதில் நம் தாய் மொழி தமிழை ஒதுக்குவது நம் கண் எதிரே நடைபெறும் துரோகமாகத் தெரிகிறது. இந்த எண்ணம் அழிந்துபட வேண்டும். தமிழர்கள் தங்களுடைய தாய்மொழி, பண்பாடுகள், மரபுகள், விழுமியங்களை தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். இதற்குரிய ஆர்வத்தை அவர்களிடம் வளர்த்தெடுப்பது இன்றைய தேவை என்பது தமிழ்ப் பற்று உள்ள எவரும் மறுக்க இயலாது.

எழுக தமிழ் மங்கையரே! நல்லிளைஞீர்! - உங்கள்
இளமைதரும் கனவொருபால் இருக்கட்டும், முன்னே
தொழுக தமிழ் அன்னையினை, துலங்குக நும் ஆற்றல்!
துணிவுறவே ஊரூராய்த் தெருத்தெருவாய்ச் சென்றே
உழுக நறுஞ் சொல்லாலே! ஊன்றுக செந்தமிழை
உணர்வுமழை பொழிவிக்க எண்ண எரு ஊழ்க்க!
செழுமையுறுந் தமிழ்க் குலத்தை விளைவிக்க! பின்னர்
செந்தமிழ்த்தாய் அரசிருக்க ஏற்றுவழி செய்மே
என்கிற பெருஞ்சித்திரனார் வரிகள் என் நெஞ்சில் நிழலாடியது.

நம்மாளு ஒருத்தர், தமிழ் பாண்டித்தியம் பெற்றவர். தமிழ்ல பேசறதுல வல்லவர் அப்டி, இப்டின்னு எல்லாம் பிரமாதமா பேசப்படுபவர். தமிழர்களே தமிழில் பேசுங்கள் அப்டீன்னு ஒரு புத்தகம் வேறு எழுதியிருந்தார். அதைப் படிச்சுட்டு ஒருவர் அவரை நேரில பாத்து தன்னோட மகிழ்ச்சிய தெரிவிக்க விரும்பினார். அவரைப் பாத்து இவரு தன் ஆச்சரியத்தைக் கேட்டார். 'ஏங்க நீங்க எல்லாருட்டயும் தமிழ்லதான் பேசுவீங்களா?'ன்னார்.

அவரு, "எஸ்" அப்டீன்னார்.
(தமிழ் சி·பி தமிழ் புத்தாண்டு சிறப்புமலர் கட்டுரையாக வெளியானது)

ஆல்பர்ட், விஸ்கான்ஸின், அமெரிக்கா.

Thursday, April 20, 2006

<>உலகெங்கும் முட்டாள்கள் தினம்....!?<>


<>உலகெங்கும் முட்டாள்கள் தினம்....!?<>








"The first of April is the day we remember what we are the other 364 days of the year. " - Mark Twain.




-என்று நம்மைப்பற்றி முன்பே உரத்துச் சொல்லிவிட்டார்.



"முட்டாள்கள் தினம்" ஏப்ரல் 1ம் தேதி உலகமெல்லாம் முட்டாள்களாக்கும் முயற்சி நடைபெறுகிற ஒரு முட்டாள் நாள் என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம்தான். இதை யார் துவக்கி வைத்தது? இதற்கு ஒரு ஆரம்பம் இருந்தாக வேண்டுமே. இருந்தது உண்மைதான்!

முட்டாள்கள் தோன்றிய வரிசை என்று பார்த்தால், பிரான்சு முதலாவதாக இரண்டாவதாக இங்கிலாந்து, மூன்றாவது மெக்ஸிக்கோ அப்பறம் சுவீடன், இந்தியா என்று பட்டியல் ஒரு ரவுண்ட் உலகம் சுற்றி வரும். காலம் தன் தேய்பிறை நாட்களில் உண்மையை முழுவதுமாக மறைத்துவிடவில்லை.

அன்றைய ரோமானிய நாட்காட்டியின்படி ஏப்ரல் 1ம்தேதி பொழுது புலர்ந்து பூபாளம் பாடுகிறவேளை தான் வசந்தம் துவங்குகிற பொன்னாள். இது கி.பி.154க்கு முன்பிருந்து பொதுமக்களால் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை.



புத்தாண்டுக் கொண்டாட்டங்களை மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடியதற்கான வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன.

இந் நாளில் கடவுளுக்கு பலி செலுத்தும் பழக்கமும் காணிக்கைகளைச் செலுத்தும் வழக்கத்தையும் கொண்டிருந்தனர். ஆடல்,பாடல், நடனம் என்று கலை நிகழ்ச்சிகளில் மூழ்கி தங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திக் கொண்டனர். இது எதிர் வரும் புத்தாண்டைச் சிறப்பாக வரவேற்கும் வகையான நிகழ்வின் வெளிப்பாடாகக் கருதப்பட்டது. மகிழ்ச்சி பொங்கும் வாழ்க்கை நிலவிட வழிபாடுகளை மேற்கொண்டனர்.



ஹார்வி என்னும் வரலாற்றாய்வாளர் தனது குறிப்பில், "பிரான்சு தேசத்தின் அரசன் ஒன்பதாம் சார்லஸ் காலத்தில் மார்ச் மாதம் 25ம்தேதியிலிருந்து ஒருவார கால புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாக குறிப்பிடுகிறார்.



திருவிழாவைப்போல் நடைபெறும் இந்தக் கொண்டாட்டங்களின்போது ஒருவருக்கொருவர் பரிசுப்பொருள்களையும், அன்பளிப்புகளையும் வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டதாக குறிப்பிடுகிறார். இந்த ஒருவாரக் கொண்டாட்டத்தின் இறுதி நாளான ஏப்ரல் ஒன்றாம் தேதி பெரு விருந்துடன் புத்தாண்டு விழா நிறைவெய்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

16ம் நூற்றாண்டில் பிரான்சு தேசத்துல துவங்கியது இந்தப் பழக்கம். 1500களில் ஆண்டுத் துவக்க நாளாக ஏப்ரல் 1ம் தேதியையே கொண்டிருந்தனர். 1562ம் ஆண்டில் போப் கிரகோரி புதிய ஆண்டுத் துவக்கத்தை நடைமுறைப்படுத்தும்படி அறிவித்தார்.



ஆண்டுத் துவக்க நாளாக சனவரி 1ம்தேதியை அறிமுகம் செய்துவைத்தார். இனி மேல் பிரான்சு தேசம் முழுமையும் இந்த நாட்காட்டிதான் என்று ஊர்தோறும் அறிவிக்கப்படது. இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அல்லது போப்பின் அறிவிப்பை நம்பாதவர்கள் ஏப்ரல் 1ம்தேதியையே புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடினர்.



ஏப்ரல் 1ம்தேதியைக் கொண்டாடியவர்களை கேலியும் கிண்டலும் செய்ததோடு அவர்களை நூதனமாக ஏமாற்றி "ஏப்ரல் முட்டாள்கள்" (April Fool) என்றழைக்கவும் செய்தனர். நள்ளிரவு தாண்டியும் நாட்டிய நடனங்களில் ஈடுபட்டு மிகுந்த மகிழ்ச்சிகரமாக இருந்திருக்கின்றனர்.



ரோமாபுரி...



ரோமாபுரியில் கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வந்தபோது, நடைமுறைகளை மாற்றினார்கள். தற்போதுள்ள ஈஸ்ட்டர் பண்டிகையினையும் மாற்றி அறிவித்தார்கள். பழமையான கொண்டாட்டங்களை மாற்றியதோடு அவற்றில் ஒரு சிலவற்றை வேடிக்கை வினோத கொண்டாட்டங்களுக்குரிய நாளாக மாற்றினர். இந்த மாற்றங்களில் நம்பிக்கை இல்லாமலிருந்த இவர்களை கேலியும் கிண்டலும் செய்து விளையாட்டாக முட்டாளாக்கி ஏமாற்றும் போக்கில் ஈடுபட்டனர். இதுவே நாம் இன்றைக்கு வேடிக்கையாய் முட்டாள்களாக்கி மகிழ்கிற நாளாக தொடர்ந்திடுகிறது எனலாம்.



சனவரி மாதம் 1ம் தேதியை புத்தாண்டாக ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் அல்லது மறந்தவர்களுக்கு முட்டாள்தனமான பரிசுகளை அனுப்பினர். பெரிய பரிசுக்கூடைகள் போன்று வடிவமைத்து உள்ளே குதிரை முடி, பழைய குப்பை என்று நிரப்பிக் கொடுத்து ஏமாற்றுதல் போன்ற ஏமாற்று வேலைகளைச் செய்து ஏமாற வைத்தனர். இதை நம்பும்படியான ஆனால் நகைக்கும்படியான செயலாக செய்து மகிழ்ந்தனர். நெப்போலியன் I , ஆஸ்திரியாவைச் சேர்ந்த மேரி லூயிஸை 1810ல் திருமணம் செய்துகொண்டார். அந்தமாதம், நாள் ஏப்ரல் 1 என்பதால் மணமகளை கேலி செய்து இருக்கின்றனர். நெப்போலியன் உண்மையாகத் திருமணம் செய்யவில்லை. உன்னை முட்டாளாக்கவே திருமணம் செய்திருக்கிறார் என்று எள்ளி நகையாடியதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் முதல் நாளை, "Poission d\'avril " என்று அழைத்துள்ளனர். இத்தகைய கேலிக்கூத்துக்கள் சுற்றிச் சுழன்று பிரான்சிலிருந்து இங்கிலாந்துக்கும் அங்கிருந்து அமெரிக்காவுக்கும் ஏப்ரல் ·பூல் விரிந்து பரவி இருக்கிறது. இது குறித்து சிகாகோவில் உள்ள இல்லிநாய்ஸ் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் ஸ்டீவன் ·பேன்னிங் ஐரோப்பாவில் எப்படி எல்லாம் நடந்தது என்று விலாவாரியாகக் குறிப்பிட்டுள்ளார். கிரகோரியன் காலண்டரை ஏற்றுக்கொண்ட முதல் நாடாக பிரான்சு இருந்தாலும் இத்தகைய கேளிக்கைகளின் ஆணிவேரைக் கண்டுபிடிக்கப் போதுமான ஆதாரக் குறிப்புகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.",1]





ஏப்ரல் 1ம்தேதியைக் கொண்டாடியவர்களை கேலியும் கிண்டலும் செய்ததோடு அவர்களை நூதனமாக ஏமாற்றி "ஏப்ரல் முட்டாள்கள்" (April Fool) என்றழைக்கவும் செய்தனர். நள்ளிரவு தாண்டியும் நாட்டிய நடனங்களில் ஈடுபட்டு மிகுந்த மகிழ்ச்சிகரமாக இருந்திருக்கின்றனர்.



" ஸ்காட்லாந்தில்"...



" ஸ்காட்லாந்தில் "April Fool's Day"யை, "April Gawk" என்று கடைப்பிடித்ததாக பேராசிரியர் ஸ்டீவன் தெரிவித்துள்ளார். அதாவது ஏப்ரல் 1ம் தேதி வினோதமாக உடையுடுத்தி ரெண்டுங்கெட்டானாக நடந்து கொண்டு ஸ்காட்டிஷ் மக்கள் அந்த நாளை நகர்த்தியதாக மேலும் தெரிவிக்கிறார். ஒரு பொய்யை உண்மை என்று நம்பவைப்பது, ஒரு கடிதத்தில் அவசரம் என்று மேலே எழுதி உள்ளே முட்டாள், "இன்று ஏப்ரல் ·பூல் தினம் தெரியுமா? அது வேறு யாருமில்லை நீதான்," இப்படி எழுதி அனுப்புவதை வழக்கமாகச் செய்திருக்கின்றனர். "ஏப்ரல் மீன்" பிரெஞ்சுக் குழந்தைகள்கூட காகிதத்தில் மீன் போன்று செய்து தனது சினேகிதர்களின் முதுகில் ஒட்டி அனுப்பிக் கேலி செய்திருக்கின்றனர். இப்படி முதுகில் மீனோடு திரிகிற குழந்தைகளைப் பார்க்கும் குழந்தைகள் "ஏப்ரல் மீன்" என்று அழைத்துக் கேலி செய்திருந்திருக்கின்றனர்.





அமெரிக்காவில்...



அமெரிக்காவில் "April Fool's Day" அல்லது "All Fool's Day" என்று அழைக்கிறார்கள். சாதாரணமாக ஒரு நண்பர் இன்னொரு நண்பரை திடீர் என்று, "ஒன்னோட ஷூ லேஸ் அவிழ்ந்து தொங்குது பார்" என்றோ முதுகுப் பக்கம் கோட்டுல எதோ ஒரு கறை அசிங்கமா இருக்கு, மொதல்ல அதைக் கழட்டு என்று சொல்லி ஏமாற்றுவார்கள்.



19ம் நூற்றாண்டில் ஆசிரியர்களே மாணவர்களிடம் அங்க மேல பாருங்க பொம்மை கூஸ் பறக்குதுன்னு சொல்வாங்களாம். (நம்ம ஊர்ல வெள்ளைக் காக்கா பறக்குதுன்னு சொல்வோமே..!) மாணவர்கள் சக மாணவர்களைப் பார்த்து இன்னைக்கு ஸ்கூல் லீவு தெரியுமா? அப்டீன்னு சொல்லுவார்கள். எது எப்படியோ அவர்கள் ஏமாந்தவுடன் ஹை..... எப்ரல் ·பூல் என்று சொல்லி குதூகலித்துக் கொள்வது என்ற அளவில் தான். ஏமாற்றலுக்கு ஏமாற்றல் என்றும் நடப்பதுண்டு.



சர்க்கரைச் (சீனி) சாடியில் உப்பைப் போட்டு ஏமாற்றுதல், மணிப்பர்ஸில் ஒரே ஒரு பென்னியை வைத்து ஏமாந்தாயா முட்டாள் என்று எழுதி நண்பர்களை ஏமாற்றுதல் சகஜமான ஒன்று. கல்லூரி மாணவர்கள் தங்கள் விடுதிகளில் ஒரு மணி நேரத்தை பின்னோக்கி வைத்து குறிப்பிட்ட வகுப்புகளுக்குப் போகவிடாமல் செய்வது; அல்லது வரலாறுக்குப் பதிலாக உயிரியல் வகுப்புக்குச் செல்லவைப்பது; ஆனால் யாருக்கும் தீங்கிழைப்பது இல்லை; ஏமாற்றலுக்குப் பழி வாங்குதல் என்று இன்று வரை நடந்தது கிடையாது என்றே சொல்லவேண்டும். ஆங்காங்கே முட்டாள்தனமான ஜோக்குகளைச் சொல்லி விலா எலும்பு நோகச் சிரிக்க வைத்தல் போன்றெல்லாம் நடக்கும்.



1910ல் நியூயார்க் நகரில் தனது காப்பிக் கோப்பையில் ஒரு கரப்பான் பூச்சியைப் போட்டு ஏப்ரல் பூல் ஆக்கியதற்காக ஒருவர் கோர்ட் வாசல் படிஏறிய சம்பவமும் நடந்துதானிருகிறது.



மெக்சிக்கோ...



மெக்சிக்கோவில் பாரம்பரியமான முட்டாள்கள் தினத்தைக் கொண்டாடினாலும் இங்கு அது வேறு நாளில் வேறு காரணங்களுக்காகக் கொண்டாடப்படுகிறது. "El Dia los Inocents " என்று டிசம்பர் 28ம் தேதி பச்சிளம் பாலகர்களுக்காகக் கொண்டாடப்படுகிறது. அதிர்ஷ்டமற்ற நாட்கள் என்று முட்டாள்களாக்கப்பட்டவர்கள் கருதுகிற சூழலை பத்திரிக்கைகள், வானொலி, தொலைக்காட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு செய்திகளை வழங்குகிறது.

திரைப்படம்...

1986ல் ·ப்ரெட் வால்டன் இயக்கிய, "ஏப்ரல் பூல்ஸ் டே" திரைப்படம் மிகப் பிரபல்யம் ஆனது. டெபோரா ·போர்மேன், ஜேய் பேக்கர், டெபோரா குட்ரிச் நடித்திருந்தனர். பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தார் பிரம்மாண்டமாக தயாரித்திருந்த இப்படம் ஒளி நாடாக்களிலும் வீர நடை போட்டு வந்ததை குறிப்பாகச் சொல்லலாம்.



ஒருவர் தன் நண்பரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்,



"இந்த ஒலகத்துல ரொம்பப்பேர் முட்டாளா இருக்காங்கங்கிறதை நேத்துத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்," அப்டீன்னார்.

" அடடே, அப்படியா? எப்படித் தெரிஞ்சுக்கிட்டீங்க? " அப்டீன்னு கேட்டார்.

" அறிவியல் வளர்ச்சியில் அறிவாளிகள்" அப்டீன்னு ஒரு கருத்தரங்கத்துக்குப் போயிருந்தேன். ஒரே கூட்டம்.

அங்கிருந்த என் நண்பனைக் கூப்பிட்டேன். அவனுக்கு நான் கூப்பிட்டது காதிலயே விழல... டேய் முட்டாள்...... அப்டீன்னு கொஞ்சம் சத்தமாக்...கூப்பிட்டேன். நான் அப்படிக் கூப்பிட்டவுடனேயே நெறையாப்பேர் திரும்பிப் பாத்தாங்களே!?

-ஆல்ப‌ர்ட், அமெரிக்கா.

சித்திரைச் செவ்வானம்...!

<>சிறப்புக்கள் பலவுடன் மலரும் சித்திரைச் செவ்வானம்...!<>

இந்த ஏப்ரல் மாதத்திற்கு சில சிறப்புகள் இருக்கின்றன. ஏபரல் மாத காலந்தேர் , (ஆங்கிலத்தில் காலண்டர் என்று சொல்கிறோமே அதன் தமிழ் வடிவம்தான் காலந்தேர்! எவ்வளவு அருமையான தமிழ்ச் சொல்!)(காலம்+தேர்+காலந்தேர்( Chariot of Time) காலந்தேர் அறிவிக்கும் சிறப்பு தினங்கள் இந்த மாதத்தை ஒரு பொன்மாதம் எனப் பட்டியலிடுகிறது!
ஏப்ரல் 14, தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பு நம் தாய்மொழியாம் தமிழ் வழி மலரும் விய வருடப் பிறப்பு! மற்றொன்று ஏப்ரல் 21 பாரதிதாசனின் நினைவு தினம்! இரண்டும் மிக நெருங்கிய தொடர்புடையனஎன்பது தமிழர்கள் அறிந்த பேருண்மை.. இதிலும் இன்னொரு கூடுதல் சிறப்பு என்னவென்றால் ஏப்ரல் 29 பாரதிதாசனின் பிறந்த நாளும் முகிழ்க்கிறது! சட்ட மேதை முனைவர். அம்பேத்கார் அவர்களின் பிறந்த நாளும் கூட! ஏப்ரல் - 7 உலக சுகாதாரதினம், கிறித்தவர்களின் புனிதவெள்ளி ஏப்ரல் 14..! உலக புவி தினம் ஏப்ரல் 22...! குழந்தைத் தொழிலாளர் தினம் ஏப்ரல் - 30ல்! இப்படிப் பல சிறப்புக்களுடன் சித்திரைச் செவ்வானம் மலர்கிறது!

பார்த்திப வருடம் முடிவுற்று விய ஆண்டு துவங்குகிறது. சித்ரபானு துவங்குவதற்கு அடுத்த நாள் அறிவன். அந்த வாரத்தில் ஞாயிறுக்கு முதல் நாள் காரியன்று விடுமுறை நாளாகும். சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, துளி, சிலை என்பது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இப்படித்தான் தமிழ் பத்தி பேசினாலே நம்மில் பலருக்கு புரிய மாட்டேன் என்று அடம்பிடிக்கிறது. யாரையும் குறை சொல்லமுடியாது. தமிழ் பின் புலம் அப்படி. யார் என்ன செய்ய முடியும்? தொடக்கப்பள்ளி துவங்கி கல்லூரி வரை மாணவராகட்டும், போன வருடம் என்ன வருடம் என்று கேட்டுப்பாருங்க? 2005 அப்டீன்னுதான் சொல்லுவாங்க. எத்தனை பேர் தமிழ் வருடத்தைச் சொல்லுவாங்க? அனேகமா யாரும் சொல்ல மாட்டாங்க. தமிழ் சொல்லிக்குடுக்கிற ஆசிரியர்களிடம் கூட கேட்டுப் பாருங்க? நூத்துக்கு அய்ந்து சதவிகிதம் சொன்னால் அதிகம். இவ்வளவு ஏன்? எந்தத் தமிழ் நாளிதழாவது தமிழ்ல இன்ன வருடம்னோ, தேதின்னோ போடுறது உண்டா? கிடையாது. காரணம் என்ன? உலகம் முழுக்க ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரே வருடம், மாதம், நாள், கிழமைகளைத் தான் ஏற்றுக்கொண்டு நடைமுறையில் வழக்கத்தில் கொண்டிருக்கிறோம், என்பதுதான் உண்மை. இதில் யாரும் விதிவிலக்கில்லை.

"கரு", " கயரு", " களஉயரு " அப்டீன்னா என்ன? "கரு"ன்னா தெரியும். "கயரு" ன்னா தெரியும். அது என்ன "கள உயரு" இப்படி எல்லாம் சொல்லி எங்கள சோதிக்காதீங்க?! அப்டீங்கிறீங்களா? நீங்க நெனைக்கிற கரு, கயரு இது கிடையாது. இதெல்லாம் தமிழ் எழுத்துக்களில் வரும் தமிழ் எண்கள். காதுல பூ வைக்கிற சமாச்சாரமெல்லாம் இல்லை. ஒரு "கரு" கைமாத்தா கொடேன், என்றால் 12 ரூபா கைமாத்தா கொடேன் என்றுதான் பொருள். அந்தக் காலத் தமிழ்! அதுக்குன்னு இந்தக் காலத்துல, ஒரு "கரு" கைமாத்தா கொடுன்னு கேக்கக்கூடாதவங்ககிட்ட கேட்டால், நல்லா மாத்துதான் கிடைக்கும் இல்லீங்களா? க=1,உ=2,ரு=5,ய=10,ள=100. 15 என்பதை கயரு என்றும் 125 என்பதை களஉயரு என்றே எழுதுவார்கள். தமிழ் எண் வடிவங்களைக் கொண்டு கூட்டல், கழித்தல், வகுத்தல் என்ற கணித முறை நடை முறைப்படுத்துவதில் கடினமாகத்தான் இருந்திருக்க வேண்டும். இப்போது போல கணினி எல்லாம் கிடையாதே. எல்லாம் மனக் கணினிதான்! மனக்கணிப்பில்தான் எல்லாமே... இருந்திருக்கின்றன. மனம் தான் கணினி (கம்ப்யூட்டர்)போல. உள்ளிட்டது (இன்புட்) தான் அப்படியே வரும். நமக்கு இந்தத் தமிழ் வேண்டாம்கிறீங்களா? நடைமுறையிலிருக்கிறதே நல்ல தமிழ்தான் என்ற முடிவுக்குச் சட்டென்று வந்துவிடுவோம். சரி... தமிழ் ஆராய்ச்சிய அப்பறமா வச்சுக்குவோம்.

"பார்த்திப" என்ற கடந்தவாண்டு முடிவடைந்து "விய" ஆண்டு புலருகிறது. பஞ்சாங்க கணிப்புகளின்படி இவ்வாண்டு பெரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படப்போவதில்லை. ஆகவே நல்ல ஆண்டாகவே இருக்கும் எனக் கருதப்படுகிறதாம். தம்ழிஆண்டுச் சுழற்சியில் இருபதாம் ஆண்டு இவ்வாண்டு!

அக்காலத்தில் சூரியனே பூமியை அல்லது மேருவைச் சுற்றிவருவதாக நம்பினார்கள். ஆகவே சூரியன் ஒருமுறை சுற்றிவரும் கால அளவு என்றே கருதினார்கள். இதனை சூரியனின் பெயரால் சௌரமான ஆண்டுக்கணிப்பு என்று அழைத்தார்கள். இது 365.25+++ நாள்கால அளவு கொண்டது. சௌரமான மாதங்கள் சாந்திரமான மாதப்பெயர்களையும் முக்கிய திதிகளையும் பெற்றுக்கொண்டன. செளரமான மாதங்கள் வானத்துவிண்மீன்களின் அதாவது நட்சத்திரங்களின் பெயர்கள் கொண்டே நிர்ணயித்தனர். தமிழ் மாதப் பிறப்பும் அதனையொத்து அமையும் ஆண்டுப் பிறப்பும் கதிரவனின் இயக்கத்தைக் கொண்டே நம் முன்னோர் கணித்து, சூரியன் தன் பயணத்தை மேஷராசியில் காலடி வைத்து உட் புகுகின்ற பொன் நாளே தமிழ்ப் புத்தாண்டின் துவக்க நாளாக அமைத்துள்ளனர்.


இன்னொன்றில் சந்திரன் பூமியைச்சுற்றும் காலத்தை அடிப்படையாகக்கொண்டது. ஒரு அமாவாசையிருந்து மறு அமாவாசை வரைக்கும் கொண்ட கால அளவு. இது 29.5 நாள்களைக் கொண்டது. ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்துடன் சந்திரன் கூடியிருக்கும்போதே முழுநிலவு ஏற்படும்.
ஆகவே ஒவ்வொரு சாந்திரமான மாதமும் அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தின் பெயரேலேயே அழைக்கப்படலாயிற்று. சித்திரை, வைகாசி என்றெல்லாம் அப்படித்தான் ஏற்பட்டன. பழங்காலத்திலேயே சௌரமானத்தையும் சாந்திரமானத்தையும் இணத்துவிட்டார்கள். இதன்படி தமிழ் மாதங்களை சித்திரை - மேட ஞாயிறு, வைகாசி - இடப ஞாயிறு, ஆனி - மிதுன ஞாயிறு, ஆடி - கடக ஞாயிறு ,ஆவணி - சிங்க ஞாயிறு, புரட்டசி - கன்னி ஞாயிறு, ஐப்பசி - துலா ஞாயிறு கார்த்திகை - விருச்சிக ஞாயிறு, மார்கழி - தனு ஞாயிறு, தை - மகர ஞாயிறு, மாசி - கும்ப ஞாயிறு பங்குனி - மீன ஞாயிறு, என்றும் வழக்கத்தில் கொண்டிருந்திருக்கின்றனர்.

அடுத்து ஆண்டு கணக்கிடும் முறையில், அறுபது ஆண்டுகளுக்கு பெயர் சூட்டி, 60 ஆண்டுகள் ஆனதும் அந்தப் பெயர்களையே திரும்பவும் பயன்படுத்தும் சுழற்சி முறை இடைக்காலத்தில் புகுந்த வைதீக வழிபாட்டு முறையாகும். இந்தப் பற்சக்கர முறையில் உள்ள அறுபது ஆண்டுகளுக்கு வழங்கிய கணக்கு ஆபாசக் கணக்கு! அதற்கு முன் விக்கிரமன் சகாப்தம், சாலிவாகன சகாப்தம், போன்று ஆண்டுகளைத் தொடர்ச்சியாக எண்ணிக்குறிக்கும் முறையே இருந்திருக்கிறது. வைதிக முறையில் அமையும் பிரபவ, விபவ முதலான ஆண்டுப் பெயர்கள் தமிழ்ப் பெயர்களும் அல்ல; வரலாற்று அறிவு பெறவும், காலம் கணக்கிடவும் ஏற்றதுமல்ல; இருந்தபோதும் வடமொழியை வாயிலாக வைத்து பிரசவித்த வருடங்களைத்தான் தமிழ் வருடங்களாகப் பாவித்து வருகிறோம் என்பது மிகக் கசக்கும் உண்மை. தமிழாண்டுப் பெயர்கள் அனைத்தும் சமஸ்கிருதம். தற்போது நடைமுறையில் உள்ள தமிழாண்டு 21 வது ஆண்டாகும்.
திருவள்ளுவராண்டு.....! திருவள்ளுவர் ஆண்டு என்று தமிழ்நாட்டரசு சொன்னாலும் அது இன்னும் மக்களிடம் நடைமுறையில் இல்லை. யாரும் நான் திருவள்ளுவர் ஆண்டு 1900ல் பிறந்தேன் என்று சொல்லிக்கொள்வதில்லை. கல்யாணப்பத்திரிகைகளில் கூட திருவள்ளுவர் ஆண்டு வரிசையைப் பயன்படுத்துவதில்லை. நம்மிடமும் பன்னிரண்டு ஆண்டுகள் கொண்ட வட்டமொன்று இருக்கிறது. இப்போது அது வழக்கில் இல்லை. அதனை இப்போது மாமாங்கம் என்றுகுறிப்பிடுகிறோம்.
தூரகிழக்கு தென்கிழக்காசிய நாடுகள் அனைத்துக்குமே சொந்த காலந்தேர்கள் (காலண்டர்கள்) இருக்கின்றன.
ஜாவாவில் சக ஆண்டு.
ஜப்பானில் சக்கரவர்த்திவம்சத்தின் தொடக்கம்.
தாய்லந்தில் பௌத்த ஆண்டு.
சீனாவுக்கு கான்·பூஷியஸ் ஆண்டு, தாஓ ஆண்டு முதலியவை.
இருப்பினும் சீனாவில் அதிகம் பயில்வது கிரெகோரியன் காலண்டர்தான்.

வியாழன்/குரு பன்னிரண்டு ராசிகளிலும் சஞ்சரித்து மீண்டும் ஆரம்பித்தஇடத்துக்கே வரும் கால அளவு ஒரு மாமாங்கம்.
மனித வாழ்க்கையில் ஒரு மாமாங்கம் என்பது முக்கியமான அளவுகோல்.பன்னிரண்டு வயதில் திருமணம் செய்வார்கள்.

தமிழருக்கு தொடர்ச்சியாக ஆண்டுகளைக் குறிக்கும் முறை இல்லா நிலை நீக்க தமிழறிஞர்கள், சான்றோர் புலவர் பெருமக்கள் 1921ம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் கூடி ஆராய்ந்தனர். தமிழ்க்கடல் மறைமலையடிகள் தமிழ்தென்றல் திருவிக., தமிழ்க்காவலர் சுப்பிரமணியபிள்ளை, சைவப்பாதிரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர்.ந.மு.வேங்கடசாமிநாட்டார், நாவலர் சோமசுந்தரபாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பொ.விசுவநாதம் ஆகியோர் உட்பட்ட தமிழ்ப்பேராளர்கள் இதில் கலந்துகொண்டு தொடர்ச்சியாக ஆண்டுக் கணக்கு மேற்கொள்ளத் தமிழர்கள் குறிக்கும்வகையில் திருவள்ளுவர் பிறந்த ஆண்டைத் தீர்மானித்தது. திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு.31 என்றும் முடிவு செய்தனர். வள்ளுவராண்டு என்று அவர்கள் கணித்திருப்பதுகூட தவறான கணிப்புத்தான், என்று சொல்லுவாரும் உண்டு.

1971ல் தமிழக அரசு நாட்குறிப்புகளில் திருவள்ளுவராண்டு இடம்பெறத்துவங்கியது; 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும், 1981லிருந்து தமிழ்நாடு அரசு அலுவலகங்களிலிலும் திருவள்ளுவராண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. பொதுமக்கள் பயன்படுத்துமாறு அரசால் அறிவுறுத்தப்படவில்லை.

மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் 50ஆண்டுகள் அயராது ஆராய்ச்சி செய்து சித்திரை முதல் பங்குனிவரை உள்ள 12 மாதங்கள் பெயர்கள் தமிழோடு தொடர்புடையது அல்லஅல்ல என்று அடித்துக்கூறி,"சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, இரட்டை, கடகம், மடங்கல், கன்னி, தலை, துளி, சிலை ஆகிய 12 மாதப் பெயர்களையும் ஙாயிறு, திங்கள், செவ்வாய், அறிவன், வியாழன், வெள்ளி, காரி என்று ஏழுகிழமைகளுக்கான தமிழ்ப் பெயர்களையும் தமிழர்கள் பின்பற்றவேண்டும் என்று கூறினார்.

செய்யத்தகக்வை என்று சான்றோர் பெருமக்கள் புகழ்ந்து கூறியவைகளைக் கடைப்பிடிக்கவேண்டும். அவ்வாறு செய்யாமல் மறந்து சோர்ந்தோருக்கு எப்போதும் நன்மை இல்லை என்பது அய்யன் வள்ளுவனின் வேதவாக்கு. "புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் - 538 எனவே தமிழ் மொழி, தமிழ் மக்கள், தமிழ்நாடு ஆகியவற்றின் நலனும் வளனும் நாடுவோர் திருவள்ளுவராண்டை உபயோகிப்பர்.

கிமுக்களில்.....

பொதுவாக ஆண்டுக் கணக்கு நம் முன்னோர்களால் எப்படிஎப்படியோ கணக்கிடப்பட்டு பின்பற்றப்பட்டு வந்திருந்தாலும் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே அதாவது 3102 லிருந்து ஒரு ஒழுங்குசெய்யப்பட்டு வரையறுக்கப்பட்ட ஆண்டுக் கணக்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்திருப்பதை அறிய முடிகிறது. ஆண்டுக் கணக்கை "அப்தம்" என்று வழங்கிவந்திருக்கின்றனர். கி.மு.3102 லிருந்து தொடங்கப்படுவதை "கலியப்தம்" என்று நெறிப்படுத்தப்பட்டு நடப்பிலிருந்தது. தமிழர்களிடம் மட்டுமல்லாது சில பண்டைய இனங்களான மாயா, சுமேரியன் ஆகியோரிடமும் இருந்து வந்திருக்கிறது. இதன் பின்னர் பல அப்தங்கள் ஏற்பட்டன. விக்கிரமாதித்தன் பெயரால் தோன்றியது விக்ரமாப்தம் அல்லது விக்ரமாங்க சகாப்தம் ஆகும். கி.பி. 78ல் ஏற்பட்டது "சக சகாப்தம்"ஆகும். இதுதான் பாரதத்தின் பெரும்பகுதியிலும் தென்கிழக்காசியா பகுதிகளிலும் பரவியது. இன்றும் பயன் படுத்தப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
வராலாற்றுப் பழமையுடைய, அராபியர்களூம், சீனர்களும் சந்திரனை அடிப்படையாக வைத்து ஒரு பவுர்ணமியிலிருந்து இன்னொரு பவுர்ணமி வரை கொண்ட 28 நாட்களை ஒருமாதம் என்று கணித்திருந்தனர். இந்த முறையில் கோள் சுழற்சிக் கணிப்பை வரையறுப்பதில் குழப்பம் ஏற்படவே சீனப்பேரரசர் கணியர்களைத் தூக்கிலிட்டதாகவும் அதன் பின் தமிழ்க் கணியர்களைச் சீன நாட்டுக்கு அழைத்து நம் முறையில் கணிதம் பயிற்றுவிக்கச் செய்ததாக சீனவரலாற்றுக்குறிப்புகள் அதிர்ந்து தெரிவிக்கிறது.
தமிழ் எண் வடிவங்களைக் கொண்டு கூட்டல், கழித்தல், வகுத்தல் என்ற கணித முறை நடை முறைப்படுத்துவதில் கடினமாகத்தான் இஇருந்திருக்க வேண்டும். இஇப்போது போல அந்தக்காலத்தில் கணினி எல்லாம் கிடையாதே. எல்லாம் மனக் கணினிதான்! மனக்கணிப்பில்தான் எல்லாமே... இஇருந்திருக்கின்றன. மனம் தான் கணினி. மில்லியனும், பில்லியனையும் அன்றைய தமிழன் கணக்கிட்ட முறையைப் பாருங்கள்!


10 கோடி .. 1 அற்புதம்
10 அற்புதம் .. 1 நிகற்புதம்
10 நிகற்புதம் .. 1 கும்பம்
10 கும்பம் .. 1 கணம்
10 கணம் .. 1 கற்பம்
10 கற்பம் .. 1 நிகற்பம்
10 நிகற்பம் .. 1 பதுமம்
10 பதுமம் .. 1 சங்கம்
10 சங்கம் .. 1 வெள்ளம்
அ சமுத்திரம் 10 வெள்ளம் ..
1 அந்நியம் அ ஆம்பல்10 அன்னியம் ..
1 மத்தியம் அ அர்த்தம்10 மத்தியம் ..
1 பரார்த்தம் 10 பரார்த்தம் .. 1 பூரியம்
தற்போது புழங்கும் தசம எண்வரிசை இந்தியாவில் கருவாகி உருவாகிப், பின்அரேபிய நாடுகளின் வழியே ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றது என்பது எண்ணியல் அறிஞர் கருத்தாகும்.

வானவியலில் மிகுந்த முன்னேற்றமடைந்திருந்தஇந்தியாவில் மிகப்பெரிய எண்களுக்கும் தேவையிருந்தது. குப்பையைக் கிளறியதில் கிடைத்தது இது:-

விந்தம் - 64,00,000

நியுதம் - மில்லியன்

மகாகும்பம் - பில்லியன்

கற்பம் - பத்து பில்லியன்

கடல் - பத்தாயிரம் பில்லியன்

பரார்த்தம் - ஒரு லட்சம் பில்லியன்

நிகற்பம் - பத்து டிரில்லியன்

மகாகிதி - ஓராயிரம் டிரில்லியன்

மகாகோணி (மகா§க்ஷ¡ணி) - பத்து டிரில்லியன்

மகாக்ஷ¢தி - ஆயிரம் டிரில்லியன்

சோபம் - பத்தாயிரம் டிரில்லியன்

சாகரம் - பத்து குவாடிரில்லியன்

மகாசாகரம் - 18 சாகரம்

மகாசோபம் (மகா§க்ஷ¡பம்) - நூறாயிரம் டிரில்லியன்

மகாபூரி - பத்து குவின்டில்லியன்

கீழ்க்கண்ட *மிகப்பெரிய* எண்களை தமிழர்கள் புழக்கத்தில் புரளவிட்டுள்ளனர். ஆனால் அவைஎதைக் குறிப்பிட்டன என்பதை தமிழறிஞர்கள் கருத்துரைத்தால் என்போன்ற அரைகுறைகளும்நிறையத் தெரிந்துகொள்ள வாய்ப்பிருக்கும்!

மகாதோரை
மகாநிகற்பம்
மகாமகரம்
மகாவரி
மகாவற்புதம்
மகாவுற்பலம்
பிரம்மகற்பம்
கமலம்
பல்லம்
பெகுலம்
தேவகோடி
விற்கோடி
மகாவேணு
தோழம்பற்பம்
கணனை
தன்மனை
அபிதான சிந்தாமணி சொல்லும் எண்ணின் வகுப்பு (36 வகை):
ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பதினாயிரம், இலக்கம், பத்திலக்கம், கோடி,பத்துக்கோடி, நூறுகோடி, அர்ப்புதம், கர்வம், மகாகர்வம், பதுமம்,மகாபதுமம், சங்ம, மகாசங்கம், §க்ஷ¡ணி, மகா§க்ஷ¡ணி, க்ஷதி, மகாக்ஷதி,§க்ஷ¡பம், மகா§க்ஷ¡பம், பரார்த்தம், சாகரம், பரதம், அசிந்தியம், அத்தியந்தம், அனந்தம், பூரி, மகாபூரி, அப்பிரமேயம், அதுலம்,அகம்மியம், அவ்வியத்தம்.


இது தவிர யுகக்கணக்கு, தெய்வத்துள் வைக்கப்பட்டவர் (வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து) வயதுக்கணக்கு, வான்கணக்கு, நிலக்கணக்கு, நுணுக்கக்கணக்கு, பின்னக்கணக்கு (முந்திரி?), என்றெல்லாம் இருந்துள்ளன. காரிநாயனார் கணக்கதிகாரத்தில் கொஞ்சம் காணலாம்.
தமிழர்களின் பழைய கணக்கீட்டு முறைகள் மிகவும் வியப்பானவை. மிகவும் நுட்பமான கணக்கீட்டு முறை அவர்களிடமிருந்தது. நுண்மையான அளவுகளிலிருந்து பெரிய அளவுகளை விரிவாய்க் கணக்கிட்டனர். அவர்களின் நீட்டல் அளவு முறையைக் கொஞ்சம் பாருங்களேன்.

8அணு - 1தேர்த்துகள்

8தேர்த்துகள் - 1பஞ்சிழை

8பஞ்சிழை - 1மயிர்

8மயிர் - 1நுண்மணல்

8நுண்மணல் - 1கடுகு

8கடுகு - 1நெல்

8நெல் - 1பெருவிரல்

12பெருவிரல் - 1சாண்

2சாண் - 1முழம்

4முழம் - 1கோல்(அ)பாகம்

500கோல் - 1கூப்பீடு

தமிழர்களிடம் வணங்குவது, வழிபடுவது, எழுதுவது, பேசுவது மிகுதியாகவும் போற்றுவது, பின்பற்றுவது, பரப்புவது, செயல்படுத்துவது குறைவாகவும் இருக்கின்றன. தனித்தனியாக உயரும் பண்பாடு மிகுதியாகவும், கூட்டாக் ஒன்று சேர்ந்து உயரும் பண்பாடு குறைவாகவும் உள்ளன. தனி மரம் தோப்பாகாது என்பது முதுமொழி!

தமிழ்ப்புத்தாண்டு மலரும் பொன் காலைப் பொழுதில் தமிழர்கள் அதிகாலையிலேயே எழுந்து, குளித்து தூய ஆடை அணிந்து கதிரவனை வணங்குகின்றனர். சிலர் தங்கள் குலதெய்வம் குடிகொண்டிருகிறகோவில்களுக்குச் சென்று வழிபடுகின்றனர். விசேச ஆராதனை, அபிசேகங்கள் செய்து வழிபடுகின்ற அதே நேரத்தில் வீட்டில் உள்ள பெரியோர்களிடம் ஆசி பெறுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தங்கள் வீட்டு உபயோகத்திற்கு ஒரு புதிய பொருளை வாங்கி அளிக்கின்ற பழக்கமும் சிலரிடம் காணப்படுகிறது.

புத்தாண்டுக் காலையில் திருக்கோயில்களில் பஞ்சாங்கம் வாசிக்கிற பழக்கமும் கடைப்பிடிக்கப்படுகிறது. பஞ்சாங்கம் வாசிப்பதிலும் நம் முன்னோர்கள் ஒருவித அர்த்தம் உள்ளடக்கி வைத்துள்ளனர். பஞ்சாங்கம் என்பது பஞ்ச... அங்கம் என்ற இரு தனிச் சொல்லின் சொற்சேர்க்கையாகும். இ இதன் பொருள் அய்ந்து உறுப்புக்களான வாரம் அல்லது கிழமை, திதி, நட்சத்திரம், யோகம், கரணம் என்னும் அய்ந்து உறுப்புக்களைக் கொண்டது. வாரம் அல்லது கிழமை என்பது நாளைக் குறிக்கும். இது அடுத்தடுத்து வருவதால் பஞ்சாங்கத்தில் முதலிடம் பெறுகிறது. கிழமைக்கு உரிமை என்று பொருள்.

ஞாயிறு ( சூரியன் ) திங்கள் ( சந்திரன் ), செவ்வாய் ( மார்ஸ் எனப்படும் செவ்வாய்க் கிரகம் ), புதன் ( மெர்க்குரி ), வியாழன் ( ஜூப்பிடர் ), வெள்ளி ( வீனஸ் ), சனி ( சாட்டர்ன் எனும் சனிக் கிரகம்) எனும் ஏழ் கிரகங்களின் பிரதிபலிப்பாகத்தான் வாரத்தின் ஏழு நாட்களைப் பெயர் சூட்டி வழக்கில் கொண்டு வந்துள்ளனர் நம் முன்னோர் என்பதை நம்மில் பலர் அறிவோம்.
தமிழ் மாதப் பிறப்பும் அதனையொத்து அமையும் ஆண்டுப் பிறப்பும் கதிரவனின் இயக்கத்தைக் கொண்டே நம் முன்னோர் கணித்து, சூரியன் தன் பயணத்தை மேசராசியில் காலடி வைத்து உட் புகுகின்ற பொன் நாளே தமிழ்ப் புத்தாண்டின் துவக்க நாளாக அமைத்துள்ளனர்.

பஞ்சாங்கம்...........!

புத்தாண்டுக் காலையில் திருக்கோயில்களில் பஞ்சாங்கம் வாசிக்கிற பழக்கமும் கடைப்பிடிக்கப்படுகிறது. பஞ்சாங்கம் வாசிப்பதிலும் நம் முன்னோர்கள் ஒருவித அர்த்தம் உள்ளடக்கி வைத்துள்ளனர். பஞ்சாங்கம் என்பது பஞ்ச... அங்கம் என்ற இஇரு தனிச் சொல்லின் சொற்சேர்க்கையாகும்.

இதன் பொருள் அய்ந்து உறுப்புக்களான வாரம் அல்லது கிழமை, திதி, நட்சத்திரம், யோகம், கரணம் என்னும் அய்ந்து உறுப்புக்களைக் கொண்டது. வாரம் அல்லது கிழமை என்பது நாளைக் குறிக்கும். இஇது அடுத்தடுத்து வருவதால் பஞ்சாங்கத்தில் முதலிடம் பெறுகிறது. கிழமைக்கு உரிமை என்று பொருள்.

ஞாயிறு ( சூரியன் ) திங்கள் ( சந்திரன் ), செவ்வாய் ( மார்ஸ் எனப்படும் செவ்வாய்க் கிரகம் ), புதன் ( மெர்க்குரி ), வியாழன் ( ஜூப்பிடர் ), வெள்ளி ( வீனஸ் ), சனி ( சாட்டர்ன் எனும் சனிக் கிரகம்) எனும் ஏழு கிரகங்களின் பிரதிபலிப்பாகத்தான் வாரத்தின் ஏழு நாட்களைப் பெயர் சூட்டி வழக்கில் கொண்டு வந்துள்ளனர் நம் முன்னோர் என்பதை நம்மில் பலர் அறிவோம்.
தமிழ்ப்புத்தாண்டு புலருகிற நாளுக்கு முன் தினம் இரவு தங்கள் படுக்கையறையில் நிலைக்கண்ணாடி முன்பாக ஒரு வெள்ளித் தட்டில் அல்லது சுத்தமான தட்டில் பலவகையான பழங்கள், தங்கள் வீட்டில் உள்ள பணம்... காசுகள், நகைகள் போன்றவற்றை அவரவர் விருப்பத்திற்கேற்ப வைத்து விடுவார்கள். காலையில் துயில் நீங்கி எழும்போது அந்தத் தட்டின் எதிரேயுள்ள கண்ணாடியில் பார்வை பதிய கண் விழிப்பார்கள். இஇப்படிச் செய்வதால் அந்தப் புத்தாண்டில் செல்வம் குறைவிலாது கிடைக்கும் என்ற நம்பிக்கை காணப்படுகிறது. தமிழகத்தில் இந்தப் பழக்க வழக்கம் பெரும்பாலான இந்துக் குடும்பங்களில் நிலவுவதை இன்றும் காணமுடியும்.
தீபாவளி, பொங்கல் போல் தமிழ்ப்புத்தாண்டு அவ்வளவாகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவதில்லை. கோயில்களில் பஞ்சாங்கத்தைப் படித்து வரும் ஆண்டின் பலன்களைக் கூறுவார்கள். பெரும்பாலவர்கள் கோயில்களுக்குச் செல்வர்.ஒரு சிலர் புத்தாடைகள் உடுத்திச் செல்வர். வீடுகளில் எளிமையான வகையில் வழிபாடுகளுடன் சைவ உணவு வகைகளை உண்டு மகிழ்வர்.


தமிழகத்திலிருந்து வெளிவரும் பிரபலமான நாளிதழ்கள் எதிலும் தமிழ் ஆண்டு குறிப்பிடப்படுவதில்லை; சிங்கப்பூரில் வெளிவரும் தமிழ்முரசு என்ற ஒரே ஒரு பத்திரிக்கையில் தமிழ் ஆண்டு, மாதம் என்று பிரசுரிக்கப்படுகிறது. மலேசியாவிலிருந்து பல பத்திரிக்கைகள் வெளிவருகின்றது. அவற்றில் தமிழ் நேசன் மட்டும் திருவள்ளுவராண்டு 2037, பார்த்திப ஆண்டு மாசி... தேதி எனவும் ஹிஜ்ரி 1427 மாதம், தேதி என முதல் பக்கத்தில் வெளியிடுவதைக் குறிப்பிடலாம்.


நாளும் கோளும் எப்டி இருந்தாலும் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைவது அறிவு ஒன்றுதான். அறிவு வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக அமைவது கல்வி. நம்மைக்ரைசேர்க்க வல்லது கல்வி மட்டுமே. புலம் பெயர்ந்து வாழும் பெரும்பாலான தமிழர்கள் இல்லங்களில் தமிழ் தவிற்க்கப்படுகிறது. இந்தப் புத்தாண்டு தினத்திலிருந்தாவது அன்று முழுக்க வீட்டிலும் தமிழிலேயே பேசுங்கள். தங்கள் குழந்தைகளுக்கு ஒரு பாரதியையோ, வள்ளுவனையோ அறிமுகப்படுத்துங்கள். இந்தப் புத்தாண்டிலிருந்தாவது நாள்தோறும் குழந்தைகளுக்கு சில ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ் சொற்களை தவறாமல் சொல்லிக் கொடுங்கள். மெல்லத் தமிழ் இனி.... வெல்லத் தமிழாய் இனிக்க இனிக்க இல்லங்களில் மலர்ந்து மணம் பரப்பட்டும்.

விய ஆண்டு என்றழைக்கப்படும் இவ்வாண்டு எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க, அவரவர்விருப்புகள் நிறைவேற எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டி எனது இனிய வாழ்த்துக்களையும்தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னையில தெருத்தெருவாப் போய் பால் வியாபாரம் செய்தார். மொதல்ல கால் நடையா போய் வியாபாரம் செய்தார். அப்பறமா சைக்கிள், வேன் இப்படியா செய்து ஒரு பெரிய பால் பண்ணைக்கு அதிபரா ஆயிட்டார். அவரு தொழிலு நகமும் சதையும் போல பாலும் தண்ணியுமா ஓஹோன்ணுவளர்ந்துருச்சு! பெரிய ஆளாயிட்டார். தமிழ் புத்தாண்டு அன்னிக்கு அவரு தன்னோட வாழ்க்கையப்பத்தி ஒரு புத்தகம் வெளியிடப்போறதாச் சொன்னாங்க. புத்தகப் பேரு என்னானு விசாரிச்சேன்.
" கலந்த கால " நினைவுகள் அப்டீங்கிறார்!?
***************************************************என்ன? உங்களிடம் தமிழ் நாள்காட்டி இல்லையென்ற கவலையா?கவலையை விடுங்கள்; இந்தச் சுட்டியை சொடுக்கினால்நாள், நட்சத்திரம், நல்ல நேரம் சகலத்தையும் பார்க்கலாம்!http://www.cs.utk.edu/~siddhart/tamilnadu/CAL/#YEARS
அறுபதாண்டுப் பட்டியல்...!
எண். தமிழ்வருடபெயர்கள் ஆங்கில ஆண்டு 1 பிரபவ 1987--1988 2 விபவ 1988--1989 3 சுக்ல 1989--1990 4 பிரமோதூத 1990--1991 5 பிரசோர்பத்தி 1991--1992 6 ஆங்கீரச 1992--1993 7 ஸ்ரீமுக 1993--1994 8 பவ 1994--1995 9 யுவ 1995--1996 10 தாது 1996--199711 ஈஸ்வர 1997--1998 12 வெகுதானிய 1998--1999 13 பிரமாதி 1999--2000 14 விக்கிரம 2000--2001 15 விஷ¤ 2001--2002 16 சித்திரபானு 2002--2003 17 சுபானு 2003--2004 18 தாரண 2004--2005 19 பார்த்திப 2005--2006 20 விய 2006--2007 21 சர்வசித்து 2007--2008 22 சர்வதாரி 2008--2009 23 விரோதி 2009--2010 24 விருத்தி 2010--2011 25 கர 2011--2012 26 நந்தன 2012--2013 27 விஜய 2013--2014 28 ஜய 2014--2015 29 மன்மத 2015--2016 30 துன்முகி 2016--2017 31 ஹேவிளம்பி 2017--2018 32 விளம்பி 2018--2019 33 விகாரி 2019--2020 34 சார்வரி 2020--2021 35 பிலவ 2021--2022 36 சுபகிருது 2022--2023 37 சோபகிருது 2023--2024 38 குரோதி 2024--2025 39 விசுவாசுவ 2025--2026 40 பிராபவ 2026--2027 41 பிலவங்க 2027--2028 42 கீலக 2028--2029 43 செளமிய 2029--2030 44 சாதாரண 2030--2031 45 விரோதிகிருது 2031--2032 46 பரிதாபி 2032--2033 47 பிரமதீச 2033--2034 48 ஆனந்த 2034--2035 49 ராட்சச 2035--2036 50 நள 2036--2037 51 பிங்கள 2037--2038 52 காளயுக்தி 2038--2039 53 சித்தார்த்தி 2039--2040 54 ரெளத்திரி 2040--2041 55 துன்மதி 2041--2042 56 துந்துபி 2042--2043 57 ருத்ரோத்காரி 2043--2044 58 ரக்தாட்சி 2044--2045 59 குரோதன 2045--2046 60 அட்சய 2046--2047
****************************************************

Tuesday, February 28, 2006

<<>>குடியரசு தினம்...!<<>>

<>எனது குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!<>

இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக ஆண்டுக்கு இருமுறை
கோலாகலமாக தேசியக் கொடிஏற்றி இறக்கப்படுகின்றது.
உலக நாடுகள் எல்லாம் ஒரு முறை, அதாவது அந்தந்த

நாடு சுதந்திரம் பெற்ற பொன் நாளை மட்டும் கொண்டாடி
மகிழ்கின்ற நிலைதனையும், ஆனால் இந்தியத் திருநாட்டில்
மட்டும் ........ சுதந்திர தினம் என்றும் குடியரசு தினம் என்றும்

இரு வெவ்வேறு நாட்களில் கொண்டாடுகிற நிலைதனையும் பெற்றிருக்கிறோம் என்பதை எல்லோரும்
அறிவோம்.

ஆனால், ஏன்? இப்படி இரண்டு நாட்கள் கொண்டாட வேண்டும்?
எதற்காக? எப்போதிருந்து? என்பதற்கான விடை காண
இன்றைய இளைய சமுதாயம் முயன்றதுண்டா? அவர்களுக்கு
அதற்கு நேரமோ, அவகாசமோ இதற்கெல்லாம்
இல்லைதான்!


அரசியல் கட்சிகள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், சேவைச்
சங்கங்கள்...... என்று குடியரசு தினத்தன்று மூவர்ணக் கொடியில் வண்ணப் பூக்களைக் கொட்டி கெட்டியாக கயிற்றால் கட்டி, முடிச்சுப் போட்டு, கொடிக் கம்பத்தோடு சேர்த்துவைத்து இறுகக் கட்டி வைத்திருப்பார்கள்.

அதை அவிழ்த்து அந்தக் கொடிக்கம்பத்தின் உச்சி முகர வைத்து
ஒரே ஒரு உதறலில் முடிச்சு அவிழ்க்கப்பட்டு
மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் பூக்களுக்கு விடுதலை
அளித்து, கொடி....கயிறை விட்டுப் போய்விடாமல் காற்றில் படபடவென பறக்க வைக்க ஒரு வி.ஐ.பி.!

முப்படை அணிவகுப்பு! மாநிலங்கள் கண்ட சாதனை விளக்க
ஊர்தி அலங்கார அணிவகுப்பு! மாநிலங்களில், மாவட்டங்கள்
சாதனை விளக்க ஊர்தி அலங்கார அணிவகுப்பு, சிறந்த
சேவை புரிந்தோர்க்குப் பதக்கங்கள், விருதுகள், கெளரவிப்புகள் என்று இந்தியத் துணைக் கண்டமே விழாக்கோலமாயிருக்கும்!

பட்டொளி வீசிப் பறக்கும் மணிக்கொடி! வண்ணமயமாய்
மூவர்ணக்கொடி காற்றில படபடக்கிறது. பள்ளிச்
சிறுவர்களுக்கு குதூகலம். வாயில் இனிக்கும் மிட்டாய்.
அதைவிட இனிப்பு.... இன்று பள்ளி விடுமுறையல்லவா?

கூடல் நகரில்.....!
நள்ளிரவு! அந்த நடுச்சாம வேளையில் பெயர் தெரியாத
இளைஞர்கள் சிலர் கூடிப் பேசிக்கொண்டிருக்கின்றனர்.
ஊரே உறங்கிக் கொண்டிருக்கையில்.....இவர்களின் கண்களும்
காதுகளும் விழித்துகொண்டிருக்க, அந்த மையிருட்டில் அவர்கள்
உருவமே அவர்களுக்குத் தெரியாத நேரத்தில் அவர்கள்
பேசிக்கொண்டது வேறு எவருக்கும் கேட்டிருக்க வாய்ப்பில்லை!

பேசிக் கொண்டிருந்த அந்த இளைஞர்களிடம் ஒருவித துறுதுறுப்பு;
ஒருவித பரபரப்பு தென்பட்டதை அந்தக் காரிருள் மறைத்துக் கொண்டது.
அவர்கள் பேச்சு ஒருவித முடிவுக்கு வந்ததற்கு அடையாளமாக
எல்லோரின் தலையும் சம்மதம் என்பது போல ஆடி அசைய,
அந்த இளைஞர் குழுவின் தலைவன் எதையோ எடுத்து
ஒவ்வொருவருக்கும் விநியோகிக்கின்றான். எல்லோரும் பெற்றுக்கொண்ட அடுத்த வினாடி....

அரைக்கால்டிரவுசர் அணிந்த இளைஞர்கள் எதையோ கைகளில் மறைத்துப்
பிடித்துக்கொண்டு கால்கள் பின்னந்தலையில் இடிக்க ஓட்டமாய் ஓடிவருகின்றனர்! அவர்கள் ஓடி வந்து நின்ற இடம்

மதுரை மீனாட்சியம்மன் கோவில்.

கோவில் நடை திறக்கப்படவில்லை. திரைப்படக் காட்சிபோல அடுத்தடுத்த காட்சிகள் அங்கு அரங்கேறுகின்றன. மீனாட்சி அம்மன் கோவில் மதில் சுவரை ஒட்டி ஒரு சிறுவன் குனிந்துகொள்ள, அவன் முதுகில் மற்றவன், அவன் முதுகில் இன்னொருவன் என்று மளமளவென்று ஒருவரை ஒருவர் ஏணியாக்கி மேலேறுகின்றனர். அங்கிருந்து கோபுரத்துக்குத் தாவுகின்றனர். கிடுகிடுவென கோபுரத்தில் செதுக்கியிருந்த சிலைகளைப் பற்றி தங்கள் கால்களில் மிதித்து ஏறி முன்னேறுகின்றனர். கோபுர உச்சியை அடைந்ததும்
தாங்கள் கையோடு கொண்டு வந்ததை அங்கிருந்த கலசங்களில் கட்டுகின்றனர்.

கட்டி முடித்துவிட்டு கீழே பார்க்கின்றனர்; தலை சுற்றிப்போகிறார்கள்; ஆஹா! இவ்வளவு உயரத்திலா இருக்கிறோம் என்று எண்ணுகிறார்கள்.
விடிந்தும் விடியாத காலைப் பொழுது; தூரத்தில் வருகிறவர் முகம் தெரியாத இருட்டு!

கூடல் மாநகராம் மதுரை மாநகர வீதிகளில் பெண்கள் தங்கள் முற்றத்தைப் பெருக்கி சாணம் தெளித்து, மாக்கோலம் இட்டு, பசுஞ்சாணத்தை உருண்டை பிடித்து அதன் தலையில் இதழ் விரிக்காத பூசணிப் பூவை வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிற காலை வேளை!

பால், தயிர், மோர் விற்கும் பெண்கள்! வீட்டுக்குத் தண்ணீர் சுமக்கும் பெண்கள்!

காலைக்கடன்களை முடிக்க வீட்டிலிருந்து வெளியேறும் ஆண்கள்!
அத்தனை பேர்களின் கண்களும் மீனாட்சி அம்மன் கோவில் உச்சியைத் தரிசிக்கிறது!
ஆஹா! அடைந்துவிட்டோமா !? நாம் அந்தச் சுதந்திரத்தை அடைந்து விட்டோமா என்று வியப்பு மேலோங்கப் பார்த்துப் பரவசப்படுகின்றனர்.
அன்றைக்கு அதிகாலையில் அவர்களின் கண்களுக்குக் காட்சியளித்தது மீனாட்சி அம்மன் கோவில் கலசங்களில் பட்டொளி வீசிப் பறந்துகொண்டிருந்த இந்திய தேசியக் கொடிதான் அது! அதைத்தான் அந்தச் சிறுவர்கள் அங்கே... அந்த உச்சிக்கு எடுத்துச் சென்று கூடல் நகருக்கே தெரியவேண்டுமென்று கட்டிப் பறக்கவிட்டிருந்தார்கள்!
அவர்கள் அப்படிச் செய்யக் காரணம், காந்திஜி அவர்கள் நாட்டு மக்களுக்கு விடுத்திருந்த கட்டளை அது!

குடியரசு தினம் மலர்ந்த காரணம்...

1929-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய
காங்கிரஸ் மாநாட்டில், "பூரண சுயராச்சியமே நமது நாட்டின்
உடனடியான இலட்சியம்'' என்ற தீர்மானம் நிறைவேறிற்று. அதனைச் செயல்படுத்த 'எங்கு, எப்போது, எவ்வாறு அகிம்சாபூர்வமான வரிகொடா இயக்கத்தைத் திரும்பவும் தொடரலாம் என்கிற விவரங்களை
காந்திஜி அவர்களே நிர்ணயித்து அறிவிப்பார்' என்ற ஒருமனதான
மற்றொரு தீர்மானத்தின்படி, காந்திஜிக்குக் காங்கிரஸ் மகாசபை முழு அதிகாரம் வழங்கியது.

அதே நேரத்தில் நாட்டில் நிலவிய பொருளாதார மந்த நிலையும், அதன் விளைவாகப் பெருகிவிட்ட வறுமையும், மக்களிடையே கொந்தளித்த
தேசிய உணர்வும் ஆர்வமும் ஒருங்கே திரிந்து, நாட்டில் ஆங்காங்கே தீவிரவாதக் குழுவினர் அரசுக்கு எதிராக வன்முறையில் இறங்கினர்.
அச்சூழ்நிலையில் சட்ட மறுப்பு இயக்கத்தைக் காங்கிரஸ் துவக்கி
வைத்தால் வன்முறைச் சம்பவங்கள் தீவிரமடையக் கூடிய அபாயத்தைக் காந்திஜி உணர்ந்தார். ஆகவே, தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில்
திசை திருப்ப எவ்வகையான இயக்கத்தை மேற்கொள்வது என்பது குறித்து காந்திஜி தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார்.

1930ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி.... முதல் குடியரசு தினம்......!

முதற் கட்டமாக, நாடு முழுவதும் ஜனவரி 26-ஆம் தேதி (1930) அன்று அமைதியாகச் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என காந்திஜி வேண்டுகோள் விடுத்தார்.


அந்த நாள் இந்தியா சுதந்திரம் பெற்ற பின் குடியரசு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி அன்றைய தினம் நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் உள்ளூர் காங்கிரஸ்தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்திஜி வழங்கிய சுதந்திர தினப் பிரக்ஞையை எடுத்துரைத்தனர்.
ஆங்காங்கே பல்லாயிரக்கணக்கான மக்கள் மேற்கொண்ட அந்த உறுதி மொழியின் வாசகம் இதுதான்: ''நமது தாய் நாட்டிற்கு நான்கு விதத்திலும் கேடு விளைவித்து வரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகமே ஆகும்.'' ஆங்கிலேய ஆட்சியின் கீழ், நாட்டின் பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம மற்றும் ஆன்மீகம் ஆகிய நான்கு வித சீரழிவைக் குறிப்பதாக அவ்வாசகம் அமைந்திருந்தது.
அன்று, அதாவது சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே, காந்தியடிகள் ஏற்படுத்திய சுதந்திர தின நாள் தான் சுதந்திரம் பெற்ற பின் அந்த நாளை குடியரசு தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது1948ல்!
இதுதான் குடியரசு நாள் தோன்றிய வரலாறு.
ஓங்கி வளர்ந்த கம்பம்தனில் பூக்களைக் கொட்டிக் கட்டி வைத்த கொடிக் கயிறின் முடிச்சு அவிழ்வதற்கு எத்தனை, எத்தனை தியாகிகளின் மனைவிமார்கள் தங்கள் தாலிக்கொடியை இழந்து இந்த வீர சுதந்திரத்தை வாங்கித் தந்திருக்கிறார்கள் என்று இந்த நாளில் நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டும்! சுதந்திரமாகப் பறக்கத் துடிதுடிக்கும்
மூவர்ணக்கொடி உதிர்க்கும் மலர்கள் தியாகிகளின் மனைவியரின் கூந்தலிலிருந்து நிரந்தரமாகப் பிரிக்கப்பட்ட மலர்கள் என்று நம் பிள்ளைகளுக்கு அதன் வலியை உணரச் சொல்லிக்கொடுக்கவேண்டும்!

எல்லோருக்கும் எனது குடியரசு தின வாழ்த்துக்கள்!

<<>>நேசிப்பாளர்கள் தினம்...!<<>>



நேசிப்பாளர்கள் தினம்
(VALENTINE'S DAY )


பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளில் வளர்ந்து,
பரவலாக உலகம் முழுக்கபரவியதுதான்
பிப்ரவரி மாதம் 14ம் தேதி கொண்டாடப்படும்
வாலண்டைன் தினம்.

நண்பர்கள், காதலர்கள், ஏன், கணவன் - மனைவி
இப்படி நெஞ்சில் நேசங்களைவளர்த்துக் கொண்டவர்கள்
ஒருவருக்கொருவர் நேரில், அஞ்சல் மூலமாக
மகிழ்ச்சிநிறைந்த "வாலண்டைன் வாழ்த்துக்கள்"
என்று சொல்லி தங்களை வெளிப்படுத்திக்கொள்கிற
உற்சாக தினம் இது!

மையல் கொண்ட இரு இதயங்களுக்கு
குதூகலமளிக்கிறவசந்த தினம் இது!

"BE MY VALENTINE" என்றும் "FROM YOUR VALENTINE"என்றும்
தங்கள் உள்ளக் கிடக்கையை உணர்த்துகிற
உணர்ச்சிப்பூர்வமான நாள்இது!இதன் தொடக்கம் என்ன?
எப்படி? ஏன்? என்ற கேள்விகள் எழுவது இயற்கை.
இதற்குவிடை தெரிந்து கொள்வதை விட, தமக்குப்பிடித்த
மனதின், எண்ண ஓட்டங்களை அறிந்து கொள்வதில் தான்
ஆர்வம் காட்டுவர்பலர் என்பது, உள்ளங்கை நெல்லிக்
கனிவிஷயம். காலம்காலமாக வாழ்க்கையோடு ஒன்றிக் கலந்து நிற்கிற இந்த இனியதினம் உலகில் முகிழ்த்த விதத்தை சற்று ஆராய்ந்து பார்ப்போமா?

ரோமானியர்கள் லூப்பர்காலியா என்ற திருவிழா கொண்டாடுவதை வழக்கமாகக்கொண்டிருந்தனர். இன்னும் சிலர் கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றுக்கும்மேற்பட்ட புனிதர்களைக் குறிக்கும் வகையில் இந்த நாளைக் கொண்டாடியதாகவும்ஒரு கருத்துநிலவுகிறது.

இன்னும் சிலர் பிப்.14ம் தேதி மத்திய இங்கிலாந்தில்ஒருவிதப் பறவைகள் மூலமாகத் தங்கள் ஜோடிகளைத் தேர்வு செய்த ஆங்கிலேயப்பழமைவாதிகளின் இந்த நாளையே வாலண்டைன் தினமாகக் கொண்டாடியதாகவும் கருத்துநிலவுகிறது.

ரோமானிய அரசனின் ஆட்சிக் காலத்தில்தான் வாலண்டைன் தினம் கொண்டாடத்துவங்கியதற்கான வலுவான சான்றுகள் உள்ளன. ரோமானியச் சக்கரவர்த்திகிளாடிஸ் II கொடூரமாகவும், கோமாளித்தனமாகவும் ஆட்சி புரிந்தகாலகட்டம்அது! முட்டாள் தனமாக தமது இராணுவத்திற்கு கட்டளை பிறப்பிப்பான். இதனால்இராணுவத்திலிருந்து வீரர்கள் வெளியேறினர். புதிதாக இராணுவத்தில் சேரயாரும் முன்வரவில்லை.

தனது மந்திரி பரிவாரங்களை அழைத்து ஆலோசனைநடத்தினான். உருப்படியாக ஒருவரும் சொல்லவில்லை என கோபப்பட்டான்.
அந்தப்புரத்தில் தனது அந்தரங்க நாயகியுடன் சல்லாபமாக கிளாடிஸ் இருந்தநள்ளிரவு வேளையில் திடீரென ஞானோதயம் ஒன்று பிறந்தது. மஞ்சத்தை விட்டுஎழுந்து மளமளவென அரசவுடை தரித்து தர்பாருக்கு கிளம்பினான். மூத்தஅமைச்சரை அழைத்து வரச் சொன்னான். அர்த்த ராத்திரியில் என்னமோ ஏதோவெனஅவரும் பதறியடித்து ஓடி வந்தார்.
"நாட்டு மக்களுக்கு ஓர் அறிவிப்பைஉடனடியாக அறிவிக்கச் செய்யுங்கள், ரோமாபுரி நாட்டில் இனி எவருமே திருமணமேசெய்து கொள்ளக்கூடாது. ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும் ரத்துசெய்யப்படுகிறது.

இந்த அரச கட்டளையை மீறுபவர்கள் யாராயினும் கைதுசெய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப்படுவார்கள். பின்னர்அறிவிக்கப்படும் ஒரு நாளில் பொது இடத்தில் அவர்கள் கல்லால் அடித்து தலைதுண்டிக்கப்பட்டுக் கொல்லப்படுவார்கள். இது இன்றே, இப்போதே அமலுக்குவருகிறது" என்றான் அரசன்.அமைச்சர் ஏதோ சொல்ல வாயெடுக்க...கிளாடிஸின் உறுமல்," மறை கழன்ற மன்னனிடம்பேசிப் பயனில்லை என முடிவு செய்து அவ்வாறே அறிவித்தான். அரசனின்அறிவிப்பை அறிந்து ரோமானியர்கள் அதிர்ந்து போனார்கள்.

அரசனின் அறிவிப்புக்கு காரணம், திருமணமானவர்கள் தங்கள் அன்பு மனைவியைப்பிரிந்து வரத் தயங்குகிறார்கள். திருமணமான வாலிபர்களோ தங்கள் காதலியைவிட்டுவிட்டுப் பிரிந்து வரத் தயங்குகிறார்கள். குடும்ப வாழ்க்கை,அன்புக் காதலி இல்லாதபட்சத்தில் மனம் வெறுத்து
இராணுவத்தில் சேருவார்கள்.

போரிலும் மூர்க்கத்தனமாகப் போரிடுவார்கள்.
வெற்றி எளிதில் கிட்டும்என்று மன்னனுக்கு எழுந்த எண்ணமே இந்த அறிவிப்பை வெளியிடச் செய்தது.திருமணங்கள் கனவாகிப் போனதை எண்ணி சோகக் கண்ணீரில் ரோம் மிதந்தது.ஆணும் பெண்ணும் கூடிக் களிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆதியில் கடவுளேதாம் ஏவாளைப் படைத்தார். இறைவன்அங்கீகரித்த இரு மன இணைப்பை அரசன் அறுத்தெறியத் துணிந்தது அநியாயம் என்றுகொதித்தெழுந்த கிறிஸ்தவ பாதிரியாரான வாலண்டைன் அரச கட்டளையை மீறிஇரகசியமாகத்திருமணங்களை நடத்தி வைத்தார்.

முதல் வாலண்டைன் வாழ்த்து!எட்டப்ப ஒற்றர்கள் மூலம்
இந்தச் செய்தி அரசனுக்கு எட்டிவிட வாலண்டைன்",
அந்தப்புரத்தில் தனது அந்தரங்க நாயகியுடன் சல்லாபமாக கிளாடிஸ் இருந்தநள்ளிரவு வேளையில் திடீரென ஞானோதயம் ஒன்று பிறந்தது. மஞ்சத்தை விட்டுஎழுந்து மளமளவென அரசவுடை தரித்து தர்பாருக்கு கிளம்பினான். மூத்தஅமைச்சரை அழைத்து வரச் சொன்னான்.

அர்த்த ராத்திரியில் என்னமோ ஏதோவெனஅவரும் பதறியடித்து ஓடி வந்தார். "நாட்டு மக்களுக்கு ஓர் அறிவிப்பைஉடனடியாக அறிவிக்கச் செய்யுங்கள், ரோமாபுரி நாட்டில் இனி எவருமே திருமணமேசெய்து கொள்ளக்கூடாது. ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும் ரத்துசெய்யப்படுகிறது. இந்த அரச கட்டளையை மீறுபவர்கள் யாராயினும் கைதுசெய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப்படுவார்கள். பின்னர்அறிவிக்கப்படும் ஒரு நாளில் பொது இடத்தில் அவர்கள் கல்லால் அடித்து தலைதுண்டிக்கப்பட்டுக் கொல்லப்படுவார்கள். இது இன்றே, இப்போதே அமலுக்குவருகிறது" என்றான் அரசன்.

அமைச்சர் ஏதோ சொல்ல வாயெடுக்க...கிளாடிஸின் உறுமல்," மறை கழன்ற மன்னனிடம்பேசிப் பயனில்லை என முடிவு செய்து அவ்வாறே அறிவித்தான்.

அரசனின்அறிவிப்பை அறிந்து ரோமானியர்கள் அதிர்ந்து போனார்கள்.அரசனின் அறிவிப்புக்கு காரணம், திருமணமானவர்கள் தங்கள் அன்பு மனைவியைப்பிரிந்து வரத் தயங்குகிறார்கள். திருமணமான வாலிபர்களோ தங்கள் காதலியைவிட்டுவிட்டுப் பிரிந்து வரத் தயங்குகிறார்கள். குடும்ப வாழ்க்கை,அன்புக் காதலி இல்லாதபட்சத்தில் மனம் வெறுத்து இராணுவத்தில் சேருவார்கள். போரிலும் மூர்க்கத்தனமாகப் போரிடுவார்கள். வெற்றி எளிதில் கிட்டும்என்று மன்னனுக்கு எழுந்த எண்ணமே இந்த அறிவிப்பை வெளியிடச் செய்தது.திருமணங்கள் கனவாகிப் போனதை எண்ணி சோகக் கண்ணீரில் ரோம் மிதந்தது.ஆணும் பெண்ணும் கூடிக் களிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆதியில் கடவுளேதாம் ஏவாளைப் படைத்தார்.

இறைவன்அங்கீகரித்த இரு மன இணைப்பை அரசன் அறுத்தெறியத் துணிந்தது அநியாயம் என்றுகொதித்தெழுந்த கிறிஸ்தவ பாதிரியாரான வாலண்டைன் அரச கட்டளையை மீறிஇரகசியமாகத்திருமணங்களை நடத்தி வைத்தார். முதல் வாலண்டைன் வாழ்த்து!எட்டப்ப ஒற்றர்கள் மூலம் இந்தச் செய்தி அரசனுக்கு எட்டிவிட வாலண்டைன்
நிறைவேற்ற நாளும்நிர்ணயிக்கப்பட்டது.

இடைப்பட்ட காலத்தில் சிறையில் இருந்த பாதிரியார்வாலண்டைனுக்கும் சிறைக் காவலர் தலைவனின் பார்வை இழந்த மகள்அஸ்டோரியசுக்கும் அன்பு பூத்தது. மரணத்தின் வாசற்படியில் நின்றுகொண்டிருந்த வாலண்டைனை விடுவிக்க அஸ்டோரியஸ் முயன்றாள். இதை அறிந்தசிறைத் துறைத் தலைவன் மகளை வீட்டுச் சிறையில் வைத்தான். இழந்த கண்கள்கிடைத்தது போன்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்த அஸ்டோரியஸின் கனவுகள்சிதைந்தது. உருக்குலைந்து போனாள், அஸ்டோரியஸ்.

அஸ்டோரியசுக்கு, அத்தனைகட்டுக் காவலையும் மீறி காகித அட்டை ஒன்று, செய்தி சுமந்து வந்தது.

விழி இருந்தும்
வழி இல்லாமல் - மன்னன்
பழி தாங்கிப் போகிறேன்.
விழி இழந்து - பார்க்க
வழி இழந்து, நீ மன
வலி தாங்காது கதறும்
ஒலி கேட்டும், உனை மீட்க
வழி தெரியாமல் மக்களுக்காக
பலியாடாய் போகிறேன்; நீ
ஒளியாய் வாழு! பிறருக்கு
வழியாய் இரு!! சந்தோஷ
ஒளி உன் கண்களில்மிளிறும்!!
-உன்னுடைய வாலண்டைனிடமிருந்து!
( -From your Valentine....)

அன்றிலிருந்து இன்று வரை நேசிப்பாளர்களிடையேபரந்து விரிந்து நிறைந்து நிற்கிற வைர வரி வாசகமாகும். இது மட்டுமேஉண்மையாக இருக்குமானால் இந்தச் செய்தியைத் தாங்கி வந்த முதல் வாலண்டைன்அட்டை இதுவாகத்தானிருக்கும்.

வாலண்டைனின் செய்தியை, தோழி வாசிக்க அஸ்டோரியஸின் கண்கள் கண்ணீர்பூக்களைச் செறிந்த அதே நேரத்தில் வாலண்டைன் கல்லால் அடிக்கப்பட்டுசித்திரவதை செய்த பின் வாலண்டைனின் தலை துண்டிக்கப்பட்டது. அந்த நாள்270வது வருடம் பிப்ரவரி மாதம் 14ம் தேதி.அரச கட்டளையை மீறி மனங்களை இணைய வைத்து தன்னையே பலி கொடுத்த வாலண்டைன்"ரோம் " மக்களின் மனங்களில் மறையாமல் நிறைந்திருந்தார். ரோமானியசர்ச்சுகள் ஐரோப்பியரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த போது "பாகான்"விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டது. பாகான் என்றால் மதமற்றவன் என்றுபொருள். பின்னர் இதுவே வாலண்டைன் தினமாகக் கொண்டாடப்பட்டது. ஏறக்குறைய200 வருடங்களுக்குப் பிறகு போப்பாண்டவர் ஜெலாசியஸ் I ( 496 ம் ஆண்டு )"
அமெரிக்கா...
அமெரிக்காவில் மழலையர் வகுப்பில் துவங்கி பல்கலைக் கழகம் வரையிலும்வாலண்டைன் பார்ட்டி நடக்கிறது. மழலையர் வகுப்பில் விபரம் புரியாத அந்தப்பிஞ்சுகள் கர்ம சிரத்தையாக தாமே வாலண்டைன் வாழ்த்து அட்டை தயாரிப்பது,விதவிதமான "ஹார்ட்" டுகள் என்று மெனக்கெட்டு செய்வதைப் பார்த்தால் நம்ஊரில் கல்லூரி மாணவர்கள் கூட இது போன்று ஈடுபடுவதில்லை என்றே சொல்லவேண்டும். மழலையர் வகுப்பில் பயிலும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒருகாகிதப்பை பிப்ரவரி முதல் வரத்தில் கொடுக்கப்படுகிறது. அந்த வகுப்பில்பயிலும் குழந்தைகள் பெயர் அடங்கிய பட்டியலையும் கொடுத்துவிடுகிறார்கள்.ஒவ்வொரு குழந்தையும் அத்துனை பேர்களுக்கும் வாழ்த்து அட்டை தயாரித்துஅல்லது கடையில் வாங்கி பிஞ்சு விரல்களால் வண்ணக்குச்சிகளை வைத்து எழுதி,வரைந்து கூடவே மிட்டாய்கள், சாக்லேட்டுகள் போன்ற இனிப்புகளையும் கொண்டுபோய் பள்ளியில் உள்ள அந்தந்த மாணவர்கள் பைகளில் பெயரைப் படித்துசந்தோஷமாக அவரவர் பைகளில் போடும்போது ஏற்படும் உற்சாகத்திற்கு ஈடு இணைஏது?உணவு விடுதிகள், கேளிக்கை அரங்குகளில் முன்பதிவு செய்துவிட்டுபுத்தாடைகள் சகிதமாக யுவன்களும்,யுவதிகளும் டேட்டிங் வைத்துக் கொண்டவயதான ஜோடிகள் உட்பட நடனங்களிலும் ஷாம்பெய்ன் பார்ட்டிகளிலும்அமெரிக்காவில் அமரிக்கையாக சந்தோஷ சாம்ராஜ்யத்தில் நீந்தி மகிழ்கிறஒப்பற்ற தினமாகக் கொண்டாடப்படுகிறது.
அமெரிக்காவில் ரிச்மாண்ட் என்ற இடத்தில் 1898 நவம்பர் 21ம் தேதி உலகின்முதல் வாலண்டைன் மியூசியம் திறந்து வைக்கப்பட்டது.பிரிட்டன்...பிரிட்டிஷ் குழந்தைகள் இந் நாளில் விஷேசமான பாடல்களைப்பாடிக்கொண்டாடுவார்கள். பெரியவர்கள் இவர்களுக்கு பரிசுகள், பழங்கள்,கேக்குகள், சாக்லேட்கள் மற்றும் பணமும் கொடுத்து மகிழ்வார்கள்.இங்கிலாந்தின் ஒரு பகுதியில் இந் நாளில் விஷேசமாகத் தயாரிக்கப்பட்ட"வாலண்டின் பண்"ணை பிறந்த நாள் கேக் போல வாங்கி நண்பர்களுக்கும் தங்கள்மனங்கவர்ந்தவர்களுக்கும் அளித்து மகிழ்வார்கள்.1700களில்....வனிதையர்கள் தங்கள் வருங்கால இணையைத் தேர்வு செய்ய 1700களில் நூதனமான",

வாலண்டைனைப் புனிதராக அறிவித்தார். அன்றிலிருந்து மனிதப் புனிதர்வாலண்டைன் தினம் ( St.Valentine's Day ) உலகம் கொண்டாடத் தலைப்பட்டது.அமெரிக்கா...அமெரிக்காவில் மழலையர் வகுப்பில் துவங்கி பல்கலைக் கழகம் வரையிலும்வாலண்டைன் பார்ட்டி நடக்கிறது. மழலையர் வகுப்பில் விபரம் புரியாத அந்தப்பிஞ்சுகள் கர்ம சிரத்தையாக தாமே வாலண்டைன் வாழ்த்து அட்டை தயாரிப்பது,விதவிதமான "ஹார்ட்" டுகள் என்று மெனக்கெட்டு செய்வதைப் பார்த்தால் நம்ஊரில் கல்லூரி மாணவர்கள் கூட இது போன்று ஈடுபடுவதில்லை என்றே சொல்லவேண்டும். மழலையர் வகுப்பில் பயிலும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒருகாகிதப்பை பிப்ரவரி முதல் வரத்தில் கொடுக்கப்படுகிறது. அந்த வகுப்பில்பயிலும் குழந்தைகள் பெயர் அடங்கிய பட்டியலையும் கொடுத்துவிடுகிறார்கள்.
ஒவ்வொரு குழந்தையும் அத்துனை பேர்களுக்கும் வாழ்த்து அட்டை தயாரித்துஅல்லது கடையில் வாங்கி பிஞ்சு விரல்களால் வண்ணக்குச்சிகளை வைத்து எழுதி,வரைந்து கூடவே மிட்டாய்கள், சாக்லேட்டுகள் போன்ற இனிப்புகளையும் கொண்டுபோய் பள்ளியில் உள்ள அந்தந்த மாணவர்கள் பைகளில் பெயரைப் படித்துசந்தோஷமாக அவரவர் பைகளில் போடும்போது ஏற்படும் உற்சாகத்திற்கு ஈடு இணைஏது?உணவு விடுதிகள், கேளிக்கை அரங்குகளில் முன்பதிவு செய்துவிட்டுபுத்தாடைகள் சகிதமாக யுவன்களும்,யுவதிகளும் டேட்டிங் வைத்துக் கொண்டவயதான ஜோடிகள் உட்பட நடனங்களிலும் ஷாம்பெய்ன் பார்ட்டிகளிலும்அமெரிக்காவில் அமரிக்கையாக சந்தோஷ சாம்ராஜ்யத்தில் நீந்தி மகிழ்கிறஒப்பற்ற தினமாகக் கொண்டாடப்படுகிறது.
அமெரிக்காவில் ரிச்மாண்ட் என்ற இடத்தில் 1898 நவம்பர் 21ம் தேதி உலகின்முதல் வாலண்டைன் மியூசியம் திறந்து வைக்கப்பட்டது.பிரிட்டன்...பிரிட்டிஷ் குழந்தைகள் இந் நாளில் விஷேசமான பாடல்களைப்பாடிக்கொண்டாடுவார்கள். பெரியவர்கள் இவர்களுக்கு பரிசுகள், பழங்கள்,கேக்குகள், சாக்லேட்கள் மற்றும் பணமும் கொடுத்து மகிழ்வார்கள்.இங்கிலாந்தின் ஒரு பகுதியில் இந் நாளில் விஷேசமாகத் தயாரிக்கப்பட்ட"வாலண்டின் பண்"ணை பிறந்த நாள் கேக் போல வாங்கி நண்பர்களுக்கும் தங்கள்மனங்கவர்ந்தவர்களுக்கும் அளித்து மகிழ்வார்கள்.
இத்தாலி...இத்தாலியில் இந்நாளை விசேஷ நாளாக அனுசரிப்பதோடு பெரிய வாலண்டைன்விருந்துடன் (Valentine's Day Feast ) கொண்டாடி மகிழுகின்றனர். மேலும்திருமண வயதைக் கடந்தும் தள்ளிப் போகிற?டே என்கிற ஏக்கங்களில் அழுதகண்ணும், சிந்திய மூக்குமாக இருக்கிர மங்கையர்க்கு இந்த நாள் மகிழ்ச்சிப்பூக்களை மலர வைக்கிற மங்கல நாள்! சூரியன் சுதாரித்து எழுமுன் அதிகாலையில்எழுந்து நீராடி தங்களை அழகுபடுத்திக் கொண்டு ஜன்னல் முன்னால் அமர்ந்துவிடுவார்களாம். அறிந்தும் அறியாமல் அவ்வழியாக வருகிற வாலிபர்களை இந்த"ஜன்னல் மின்னல்கள்" கண்களால் தூதுவிடுவார்கள். ( இதை அறிந்தே சிலஜொள்ளுப் பார்ட்டிகள் இப்படியும் அப்படியும் நடமாடியிருக்கக் கூடும்!?)வேல் விழிகளின் வீச்சில் சிக்கிக் கொண்டால்... அப்புறம் என்ன பேண்டுவாத்திய முழக்கத்தோடு சர்ச்சில், தம்பதியராகி விடுவார்களாம். இந்தவழக்கம் வாழையடி வாழையாக இன்றும் இத்தாலியிலும், பிரிட்டனிலும் கூடநிலவுகிறது. அந்தக்காலத்தில் இப்படி நடந்தது என்பதற்கு ஆதாரமாக "ஷேக்ஸ்பியர் " இருக்கிறார். தனது பிரபல நாடகமான "ஹாம்லெட்டில்" வரும்"ஓப்பெலியா" என்ற பெண் கதா பாத்திரம் ஜன்னல் ஓரமாக அமர்ந்து இந்தசம்பவத்தைப் பாடுவதாக அமைத்துள்ளதிலிருந்து அறியலாம். அந்தப் பாடல்",

முறையைக் கையாண்டுள்ளனர். தங்களுக்குப் பிடித்தமான ஒரு சிலரின்பெயர்களைக் காகிதங்களில் எழுதி களிமண்ணில் மடித்து குளத்துத் தண்ணீரில்போடுவார்கள். முதலில் எந்தப் பெயர் கொண்ட காகிதம் தண்ணீருக்கு மேல் தலைகாட்டுகிறதோ, அந்தக் காகிதத்தில் உள்ள நபர் தான் விசுவாசமான கணவராகஇருப்பார் என்று கருதி தேர்ந்தெடுப்பார்களாம். அந்த நாள் பிப்.14!இதுவே மத்திய இங்கிலாந்தில் திருமணமாகாத பெண்கள் ஒரு விதமான வாசனை தரும்இலைகள் ஐந்தை தங்கள் தலையணையின் நான்கு முனைகளிலும் ஒன்றை நடுவிலும்வைத்துக் கொண்டு வாலண்டைன் தினத்தன்று தூங்குவதை வழக்கமாகக்கொண்டிருந்தனராம். அப்படித் தூங்கும் போது கன்னியரின் கனவில் வருங்காலக்கணவன் வருவான் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்ததாம்.
( மூடநம்பிக்கைகளில்நம்மவர்களையும் மிஞ்சித்தான் இருந்திருக்கின்றனர். )
இத்தாலி...
இத்தாலியில் இந்நாளை விசேஷ நாளாக அனுசரிப்பதோடு பெரிய வாலண்டைன்விருந்துடன் (Valentine's Day Feast ) கொண்டாடி மகிழுகின்றனர். மேலும்திருமண வயதைக் கடந்தும் தள்ளிப் போகிற?டே என்கிற ஏக்கங்களில் அழுதகண்ணும், சிந்திய மூக்குமாக இருக்கிர மங்கையர்க்கு இந்த நாள் மகிழ்ச்சிப்பூக்களை மலர வைக்கிற மங்கல நாள்! சூரியன் சுதாரித்து எழுமுன் அதிகாலையில்எழுந்து நீராடி தங்களை அழகுபடுத்திக் கொண்டு ஜன்னல் முன்னால் அமர்ந்துவிடுவார்களாம். அறிந்தும் அறியாமல் அவ்வழியாக வருகிற வாலிபர்களை இந்த"ஜன்னல் மின்னல்கள்" கண்களால் தூதுவிடுவார்கள். ( இதை அறிந்தே சிலஜொள்ளுப் பார்ட்டிகள் இப்படியும் அப்படியும் நடமாடியிருக்கக் கூடும்!?)வேல் விழிகளின் வீச்சில் சிக்கிக் கொண்டால்... அப்புறம் என்ன பேண்டுவாத்திய முழக்கத்தோடு சர்ச்சில், தம்பதியராகி விடுவார்களாம். இந்தவழக்கம் வாழையடி வாழையாக இன்றும் இத்தாலியிலும், பிரிட்டனிலும் கூடநிலவுகிறது. அந்தக்காலத்தில் இப்படி நடந்தது என்பதற்கு ஆதாரமாக "ஷேக்ஸ்பியர் " இருக்கிறார். தனது பிரபல நாடகமான "ஹாம்லெட்டில்" வரும்"ஓப்பெலியா" என்ற பெண் கதா பாத்திரம் ஜன்னல் ஓரமாக அமர்ந்து இந்தசம்பவத்தைப் பாடுவதாக அமைத்துள்ளதிலிருந்து அறியலாம். அந்தப் பாடல்...

காளையரே காலை வணக்கம்!
உங்கள் நல் வரவிற்காக
காலை வேளையில்
ஜன்னல் முன் - நான்
தவமிருக்கிறேன். நீ வந்து
என்வளைக் கரம் பற்றக்
காத்திருக்கிறேன் - உன்னுடைய
வாலண்டைனாக ! - (ஹாம்லெட் -1603 )
டென்மார்க்...
டென்மார்க்கில் ஒரு வகை வெள்ளைப் பூக்களை ( Snow Drops Flower )தங்களுக்குப் பிரியமானவர்களுக்கு அளித்து மகிழ்ச்சியைப்பரிமாறிக்கொள்வர். டேனிஷ் வாலிபர்கள், "கெக்கேப்ரேவ்" என்ற வாலண்டைன்கடிதத்தை எழுதி வனிதையர்களுக்கு அனுப்புவர். தமாஷான வசனங்களையோ,கவிதைகளையோ எழுதி பெயரை எழுதுவதற்குப் பதிலாக புள்ளிகளை வைத்துஅனுப்புவார்கள். பெயரில் எத்தனை எழுத்து இருக்கிறதோ அத்தனை புள்ளிகள்இருக்கும். இதை வைத்து தமக்கு வலை வீசிய வசீகரன் யார் என்பதைக் கண்டுபிடித்துவிட்டால் அவருக்கு "ஈஸ்ட்டர் எக்" கொடுத்து "ஹக்" பண்ணிக்கொள்வார்கள்.
பிரிட்டனில் பல இடங்களில் இந்தப் புள்ளிக் கடிதம் மூலம்தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் வழக்கத்தைக்கொண்டிருக்கிறார்கள்.இப்படி மேற்கத்திய நாடுகளில் வளர்ந்து பரவிய வாலண்டைன் தினம் வரலாறுஅறியாமலே உலகம் முழுக்க "காதலர் தினம்" என்கிறதாகவே பீடு நடை போடத்துவங்கியுள்ளது. கீழை நாடுகளில் மேல்தட்டு மக்களிடையே மட்டுமே வாலண்டைன்வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படுகிறது.
இன்னும் சில, பல ஆண்டுகளில்அதிகாரப்பூர்வமாகவே பிப் 14ம் தேதி "காதலர் தினம்" என அங்கீகரிக்கப்பட்டுவிடலாம். வாலண்டைன் பற்றி பல கிளைக் கதைகள் கூட முளைக்கலாம்.வாலண்டைன் வாழ்ந்த காலத்தைவிட வரலாறுகளைத் தேடிப் பிடித்து வருங்காலச்சந்ததியினருக்கு பொக்கிஷமாக்கி வைக்கிற பேராளர்கள் ஏராளமாய் இருக்கிறகாலமிது.
எனவே கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன்பேஅன்பு,ஆசை,நேசம்,பாசம்,பற்று,காதல் என்கிற மூவெழுத்துக்கள்முகிழ்த்துவிட்டது. இன்னும் மூன்று நூற்றாண்டுகள் பிறந்து வந்தாலும்இந்த மூவெழுத்துக்குரிய தினமாக வாலண்டைன் தினம் வாழும்!வாழ்த்து அட்டை...பொங்கலுக்கும் தீபாவளிக்கும், கிறிஸ்துமஸ¤க்கும் முன்பே வாழ்த்து",

வரிகள் இதோ : -காளையரே காலை வணக்கம்! உங்கள் நல் வரவிற்காககாலை வேளையில் ஜன்னல் முன் - நான் தவமிருக்கிறேன். நீ வந்து என்வளைக் கரம் பற்றக் காத்திருக்கிறேன் - உன்னுடைய வாலண்டைனாக ! - (ஹாம்லெட் -1603 )டென்மார்க்...டென்மார்க்கில் ஒரு வகை வெள்ளைப் பூக்களை ( Snow Drops Flower )தங்களுக்குப் பிரியமானவர்களுக்கு அளித்து மகிழ்ச்சியைப்பரிமாறிக்கொள்வர். டேனிஷ் வாலிபர்கள், "கெக்கேப்ரேவ்" என்ற வாலண்டைன்கடிதத்தை எழுதி வனிதையர்களுக்கு அனுப்புவர். தமாஷான வசனங்களையோ,கவிதைகளையோ எழுதி பெயரை எழுதுவதற்குப் பதிலாக புள்ளிகளை வைத்துஅனுப்புவார்கள். பெயரில் எத்தனை எழுத்து இருக்கிறதோ அத்தனை புள்ளிகள்இருக்கும். இதை வைத்து தமக்கு வலை வீசிய வசீகரன் யார் என்பதைக் கண்டுபிடித்துவிட்டால் அவருக்கு "ஈஸ்ட்டர் எக்" கொடுத்து "ஹக்" பண்ணிக்கொள்வார்கள். பிரிட்டனில் பல இடங்களில் இந்தப் புள்ளிக் கடிதம் மூலம்தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் வழக்கத்தைக்கொண்டிருக்கிறார்கள்.இப்படி மேற்கத்திய நாடுகளில் வளர்ந்து பரவிய வாலண்டைன் தினம் வரலாறுஅறியாமலே உலகம் முழுக்க "காதலர் தினம்" என்கிறதாகவே பீடு நடை போடத்துவங்கியுள்ளது. கீழை நாடுகளில் மேல்தட்டு மக்களிடையே மட்டுமே வாலண்டைன்வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படுகிறது. இன்னும் சில, பல ஆண்டுகளில்அதிகாரப்பூர்வமாகவே பிப் 14ம் தேதி "காதலர் தினம்" என அங்கீகரிக்கப்பட்டுவிடலாம். வாலண்டைன் பற்றி பல கிளைக் கதைகள் கூட முளைக்கலாம்.வாலண்டைன் வாழ்ந்த காலத்தைவிட வரலாறுகளைத் தேடிப் பிடித்து வருங்காலச்சந்ததியினருக்கு பொக்கிஷமாக்கி வைக்கிற பேராளர்கள் ஏராளமாய் இருக்கிறகாலமிது.எனவே கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன்பேஅன்பு,ஆசை,நேசம்,பாசம்,பற்று,காதல் என்கிற மூவெழுத்துக்கள்முகிழ்த்துவிட்டது. இன்னும் மூன்று நூற்றாண்டுகள் பிறந்து வந்தாலும்இந்த மூவெழுத்துக்குரிய தினமாக வாலண்டைன் தினம் வாழும்!வாழ்த்து அட்டை...பொங்கலுக்கும் தீபாவளிக்கும், கிறிஸ்துமஸ¤க்கும் முன்பே வாழ்த்து
இந்த நாளுக்கும் விதவிதமான வாழ்த்து அட்டைகள், அலங்கரிக்கப்பட்டஹார்ட்டுகள், வீட்டை அலங்கரிப்பதற்கான பொருட்களின் கோலாகலமான விற்பனைதுவங்கிவிடுகிறது. பெரிய பெரிய பேனர் விளம்பரங்களிலும் கண்ணைப்பறிக்கும் மின் விளக்குகளிலும் கடைகள் வரவேற்பு வாசிக்கும். இந்தநாளுக்கான விசேஷ கேண்டிகளும், கேக்குகளும், பூங்கொத்துகளும், அலங்காரக்காகிதப் பூக்களும், மலரத் துடிக்கும் ரோஜாக்களையும் வாங்கிடும்கூட்டங்கள், நாள் நெருங்க,நெருங்க அதிகரிக்கிறது. மிக நேர்த்தியானவண்ணக் காகிதங்களில் பேக் செய்யப்பட்டு சிறிதும் பெரிதுமாக பல அளவுகளில்பரிசுப் பொருட்களை வாங்கி வெளியேறும் இளைஞ இளைஞிகள் கூட்டம் 1800களில்துவங்கியதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கிறது.பிரிட்டிஷ் பெண் ஓவியர் கேட்டி கிரீனவே 1865 களில் வாழ்த்து அட்டைகளைவெளியிட்டார். மடிக்கப்பட்ட அட்டையின் உட்பக்கம் வாழ்த்துச் செய்திஎழுதுவதற்காகக் காலியிடம் விட்டும், வெளிப்பக்கங்களில் குழந்தைகள்,பூந்தோட்டங்கள் போன்ற ஓவியங்களுடன் வெளியிட்டார். இதனைக் கண்டஅமெரிக்கப் பதிப்பாளர் எஸ்தர் ஹாவ் லாண்ட் ( மசாச்சுசெட்ஸ் ) முதலில்வாழ்த்து அட்டைகள் தயாரித்து கடைகளில் ஆடர் பெற்றார். பெண்கள் சிலரைவேலைக்கு வைத்துக் கொண்டு விதவிதமான வாலண்டைன் தின வாழ்த்து அட்டையைச்செய்து விற்கத் துவங்கினார். நல்ல வரவேற்பு கிடைக்க கைவேலைப்பாடுகளுடன்கூடிய புதிய டிசைன்களை அறிமுகப்படுத்தினார். குறுகிய காலத்தில் அதாவது1870ல் ஒரு லட்சம் டாலர் லாபம் ஈட்டினார். ஒரு டாலரிலிருந்து 35 டாலர்வரை வாலண்டைன் வாழ்த்து அட்டை விற்று விற்பனையில் ஒரு ரெக்கார்டு பிரேக்ஏற்படுத்தினார். சிகாகோ அஞ்சலகத்துக்கு திடீரென் வந்து குவிந்த 25லட்சம் வாழ்த்து அட்டைகளை நாங்கள் டெலிவரி செய்யமாட்டோம் என்று தெருவில்வீசி எறிந்த நிகழ்வுகள் குறிப்பிடத் தக்கது.கவிதைகள்...கவிதைகள்...வாலண்டைன் தின தலைப்பில் கவிதைப் புத்தகங்கள் இதுவரை 69 வெளிவந்துள்ளது.அமெரிக்க கவிஞர் "எட்கர் ஆல்பர்ட் கெஸ்ட் (1881-1959) எழுதிய வாலண்டைன்கவிதை 1919ல் மிகுந்த வரவேற்பு பெற்ற கவிதையாகும். "டிரேஸிபெர்"ட்டின்",அட்டைகள் கடைகளில் படு சுறுசுறுப்பான விற்பனையைத் துவங்கிவிடுவது போலஇந்த நாளுக்கும் விதவிதமான வாழ்த்து அட்டைகள், அலங்கரிக்கப்பட்டஹார்ட்டுகள், வீட்டை அலங்கரிப்பதற்கான பொருட்களின் கோலாகலமான விற்பனைதுவங்கிவிடுகிறது. பெரிய பெரிய பேனர் விளம்பரங்களிலும் கண்ணைப்பறிக்கும் மின் விளக்குகளிலும் கடைகள் வரவேற்பு வாசிக்கும். இந்தநாளுக்கான விசேஷ கேண்டிகளும், கேக்குகளும், பூங்கொத்துகளும், அலங்காரக்காகிதப் பூக்களும், மலரத் துடிக்கும் ரோஜாக்களையும் வாங்கிடும்கூட்டங்கள், நாள் நெருங்க,நெருங்க அதிகரிக்கிறது. மிக நேர்த்தியானவண்ணக் காகிதங்களில் பேக் செய்யப்பட்டு சிறிதும் பெரிதுமாக பல அளவுகளில்பரிசுப் பொருட்களை வாங்கி வெளியேறும் இளைஞ இளைஞிகள் கூட்டம் 1800களில்துவங்கியதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கிறது.பிரிட்டிஷ் பெண் ஓவியர் கேட்டி கிரீனவே 1865 களில் வாழ்த்து அட்டைகளைவெளியிட்டார். மடிக்கப்பட்ட அட்டையின் உட்பக்கம் வாழ்த்துச் செய்திஎழுதுவதற்காகக் காலியிடம் விட்டும், வெளிப்பக்கங்களில் குழந்தைகள்,பூந்தோட்டங்கள் போன்ற ஓவியங்களுடன் வெளியிட்டார். இதனைக் கண்டஅமெரிக்கப் பதிப்பாளர் எஸ்தர் ஹாவ் லாண்ட் ( மசாச்சுசெட்ஸ் ) முதலில்வாழ்த்து அட்டைகள் தயாரித்து கடைகளில் ஆடர் பெற்றார். பெண்கள் சிலரைவேலைக்கு வைத்துக் கொண்டு விதவிதமான வாலண்டைன் தின வாழ்த்து அட்டையைச்செய்து விற்கத் துவங்கினார். நல்ல வரவேற்பு கிடைக்க கைவேலைப்பாடுகளுடன்கூடிய புதிய டிசைன்களை அறிமுகப்படுத்தினார். குறுகிய காலத்தில் அதாவது1870ல் ஒரு லட்சம் டாலர் லாபம் ஈட்டினார். ஒரு டாலரிலிருந்து 35 டாலர்வரை வாலண்டைன் வாழ்த்து அட்டை விற்று விற்பனையில் ஒரு ரெக்கார்டு பிரேக்ஏற்படுத்தினார். சிகாகோ அஞ்சலகத்துக்கு திடீரென் வந்து குவிந்த 25லட்சம் வாழ்த்து அட்டைகளை நாங்கள் டெலிவரி செய்யமாட்டோம் என்று தெருவில்வீசி எறிந்த நிகழ்வுகள் குறிப்பிடத் தக்கது.கவிதைகள்...கவிதைகள்...வாலண்டைன் தின தலைப்பில் கவிதைப் புத்தகங்கள் இதுவரை 69 வெளிவந்துள்ளது.அமெரிக்க கவிஞர் "எட்கர் ஆல்பர்ட் கெஸ்ட் (1881-1959) எழுதிய வாலண்டைன்கவிதை 1919ல் மிகுந்த வரவேற்பு பெற்ற கவிதையாகும். "டிரேஸிபெர்"ட்டின்
சந்தித்தால், "இப்போது இதயங்கள் தனிமையில் இல்லை " போன்ற கவிதைகள் மிகப்பிரபலமானது. வாலண்டைன் தின கவிதைகள் இதுவரை 1913 வெளிவந்திருப்பதாகபுத்தக நிறுவனப் புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது.ரோஜா...ஏறக்குறைய காதலர் உலகில் அங்கிங்கெனாதபடி எங்கும் வலம் வரும் ஒரு காதல்சின்னம் தான் "ரோஜா" என்றால் அதை யாராலும் மறுக்க முடியாது. ( ரோஜாப்பூகிடைக்காத இடங்களில் மாமன்,மச்சான்கள் மல்லிகைப்பூ வாங்கிக்கொடுத்திருக்கலாம்!?)
35 மில்லியன் வருடங்களாக உலகில் வாசமளித்து வாசம்செய்கிற பூ ரோஜாப்பூ! வரலாறாக இருக்கிற ரோசாப் பூவிற்க்குக் கூட சிலரகசியம் உண்டு தெரியுமா? உங்களுக்கு. அத்தனை ரகசியத்தையும் இந்த திறந்த பக்கத்தில் சொல்லிவிட முடியாது. வாலண்டைன் தின ரகசியத்தை மட்டும்உங்களுக்கு இரகசியமாகச் சொல்லி வைக்கிறேன்.வாலண்டைன் தினத்தன்று ஒரே ஒரு சிவப்பு ரோஜாவைக் கொடுத்தால், "நான் உன்னைமனதார நேசிக்கிறேன்" என்று சொல்லாமல் "அந்த" அடையாளம் சொல்லிவிடும்!ஒரு "வெள்ளை ரோஜா" வைக் கொடுத்தால், \' நீதான் என் சொர்க்கம் \' என்று புரியவைக்கும்!ஒரு வெள்ளை ரோஜாவோடு ஒரு ரோஜா மொட்டும் சேர்த்துக் கொடுத்தால், " You\'retoo young for LOVE " என்று மென்மையாகப் பொருள் சொல்லும்!அதற்காக சிவப்பு ரோஜாவையும் வெள்ளை ரோஜாவையும் கையில் எடுத்துக் கொண்டுபோய் கண்டவர்களிடம் கொடுத்தால் வேறுவகையான சன்மானம், வெகுமதிசெமர்த்தியாகக் கிடைக்கலாம். அதற்கு நான் பொறுப்பில்லை சாமி... ஆளைவிடுங்கள்!அது சரி...எத்தனையோ வாசமான மலர்கள் இருக்க ரோஜாவை ஏன் காதலர்கள்தேர்ந்தெடுத்தார்கள்? காரணமில்லாமல் இல்லை."ROSE" என்ற வர்த்தையைச் சற்று மாற்றி அமைத்துப் பாருங்கள். "EROS"என்று வரும்! அடடே! காதல் கடவுளல்லவா "EROS".... அதான்!!!ஆல்பர்ட் பெர்னாண்டோ, விஸ்கான்சின், அமெரிக்கா.",1]
);
//-->
கீப்பர் ஆப் த ஸ்டார்ஸ் என்ற தலைப்பில் வெளிவந்த இதயங்கள் இரண்டுசந்தித்தால், "இப்போது இதயங்கள் தனிமையில் இல்லை " போன்ற கவிதைகள் மிகப்பிரபலமானது. வாலண்டைன் தின கவிதைகள் இதுவரை 1913 வெளிவந்திருப்பதாகபுத்தக நிறுவனப் புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது.ரோஜா...ஏறக்குறைய காதலர் உலகில் அங்கிங்கெனாதபடி எங்கும் வலம் வரும் ஒரு காதல்சின்னம் தான் "ரோஜா" என்றால் அதை யாராலும் மறுக்க முடியாது. ( ரோஜாப்பூகிடைக்காத இடங்களில் மாமன்,மச்சான்கள் மல்லிகைப்பூ வாங்கிக்கொடுத்திருக்கலாம்!?) 35 மில்லியன் வருடங்களாக உலகில் வாசமளித்து வாசம்செய்கிற பூ ரோஜாப்பூ! வரலாறாக இருக்கிற ரோசாப் பூவிற்க்குக் கூட சிலரகசியம் உண்டு தெரியுமா? உங்களுக்கு. அத்தனை ரகசியத்தையும் இந்த திறந்தபக்கத்தில் சொல்லிவிட முடியாது. வாலண்டைன் தின ரகசியத்தை மட்டும்உங்களுக்கு இரகசியமாகச் சொல்லி வைக்கிறேன்.வாலண்டைன் தினத்தன்று ஒரே ஒரு சிவப்பு ரோஜாவைக் கொடுத்தால், "நான் உன்னைமனதார நேசிக்கிறேன்" என்று சொல்லாமல் "அந்த" அடையாளம் சொல்லிவிடும்!ஒரு "வெள்ளை ரோஜா" வைக் கொடுத்தால், ' நீதான் என் சொர்க்கம் ' என்று புரியவைக்கும்!ஒரு வெள்ளை ரோஜாவோடு ஒரு ரோஜா மொட்டும் சேர்த்துக் கொடுத்தால், " You'retoo young for LOVE " என்று மென்மையாகப் பொருள் சொல்லும்!அதற்காக சிவப்பு ரோஜாவையும் வெள்ளை ரோஜாவையும் கையில் எடுத்துக் கொண்டுபோய் கண்டவர்களிடம் கொடுத்தால் வேறுவகையான சன்மானம், வெகுமதிசெமர்த்தியாகக் கிடைக்கலாம். அதற்கு நான் பொறுப்பில்லை சாமி... ஆளைவிடுங்கள்!அது சரி...எத்தனையோ வாசமான மலர்கள் இருக்க ரோஜாவை ஏன் காதலர்கள்தேர்ந்தெடுத்தார்கள்? காரணமில்லாமல் இல்லை."ROSE" என்ற வர்த்தையைச் சற்று மாற்றி அமைத்துப் பாருங்கள். "EROS"என்று வரும்! அடடே! காதல் கடவுளல்லவா "EROS".... அதான்!!!




-ஆல்பர்ட் பெர்னாண்டோ, விஸ்கான்சின், அமெரிக்கா.